ருசியான எள்ளு சட்னி செய்வது எப்படி!

எள்ளு சட்னி...
எள்ளு சட்னி...www.youtube.com

திய நேரத்தில் சாம்பார் பொரியல் ரசம் என்று இதே மெனு இருந்தால் சீக்கிரம் போர் அடித்து விடும். நடுநடுவில் ஏதேனும் ஒரு சட்னி வகையை அரைத்து வைத்துக் கொண்டால்  சோற்றில் போட்டு பிசைந்து சாப்பிடவும் ரசம் அல்லது தயிருக்கு தொட்டு சாப்பிடவும் அமிர்தமாக இருக்கும். இதோ உடலுக்கு வலு தரும் இந்த எள்ளு சட்னியை செய்து பாருங்கள். சட்னியின் மணம் சாப்பாடு கூடுதலாக உள்ளே இறக்கும்.

தேவையான பொருட்கள்:
தேங்காய்த் துருவல் -  1சிறிய கப் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு- தலா 2 ஸ்பூன்
வெள்ளை எள்ளு - 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிது
எண்ணெய் – சிறிது


செய்முறை:
ரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பு முதலில் போட்டு வாசம் வரும் வரை நன்கு வதக்கி சிவந்ததும், அதில் சுத்தம் செய்த எள்ளைப் போட்டு  வாசம் வரும் வரை கிளறிவிட்டு கூடவே சிவந்த மிளகாய் போட்டு வதக்கி தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு வதக்கவும். இளம்  சிவப்பாக தேங்காய் துருவலும் பொன்னிறத்தில் வதங்கியதும் எடுத்து ஆற வைத்து தேவையான உப்பு புளி சேர்த்து மிக்ஸியில் ஒன்று இரண்டாக அடிக்கவும். ஒரு கரண்டியில் காய்ந்த எண்ணெயில் கடுகு கருவேப்பிலை போட்டுப் பொறிந்ததும் சட்னியின் மேலே சேர்த்து நன்கு கலக்கி பரிமாறலாம்.

இதையும் படியுங்கள்:
வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடிங்க....
எள்ளு சட்னி...

இந்த சட்னியே மணமாக இருக்கும் என்பதால் மேலே நெய்யோ எண்ணெயோ சேர்க்க வேண்டியது இல்லை . தேவைப்பட்டால் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்தச் சட்னி செய்வது எளிது. ஆனால் அதிக ருசியாக இருக்கும் . காரமும் புரியும் அவரவர் விருப்பப்படி சேர்க்கலாம். வறுக்கும் பக்குவம்தான் முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com