ருசியான வாழைக்காய் பொடிமாஸ் செய்வது எப்படி?

ருசியான வாழைக்காய் பொடிமாஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 1

பச்சை மிளகாய் - 2

உளுந்தம் பருப்பு - 1டீஸ்பூன்

கடுகு - 1/4டீஸ்பூன்       

எண்ணெய் - 3 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

பெருங்காயம் 2 சிட்டிகை   

சின்ன வெங்காயம் - 8 

தேங்காய் துருவல் - 3டீஸ்பூன்

உப்பு தேவையானஅளவு

செய்முறை: 

1 வாழைக்காயை 2 ஆக வெட்டி தண்ணீரில்வேகவைக்கவும். 

வாழைக்காய் வேகவும் அதனை எடுத்து தோலை உரிக்கவும். வேகவைத்த வாழைக்காயை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இந்த அரைத்த வாழைக்காயுடன் சிறிது உப்பு மற்றும் 3 டீஸ்பூன் தேங்காய் சேர்த்து நன்கு கலக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறி

வேப்பிலை சேர்க்கவும். உளுந்தம் பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இப்போது நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். பின்னர் சிறிது பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிது உப்பு சேர்த்து வதக்கி பின் துருவிய வாழைக்காய் கலவையை சேர்க்கவும். அனைத்தையும் நன்றாக கலந்து 2-3 நிமிடங்கள் சமைக்கவும். ரச சாதம், சாம்பார் சாதத்துடன் சுவையாக இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com