தமிழர்களுக்கு பிடித்த சிற்றுண்டி வெண் பொங்கல்தான். இப்போது நாம் நெய் பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை…
6 பேருக்கு
பச்சை அரிசி முக்கால
கிலோ ( புழுங்கல் அரிசியிலும் செய்யலாம். ஆனால் பச்சை அரிசு சுவை அதிகம்)
பாசிப்பருப்பு கால் கிலோ சிறு பருப்பு என்றும் சொல்வார்கள்.
ஆவின் பட்டர 200 கிராம்
முந்திரி பருப்பு 100 கிராம்.
உடைத்த மிளகு 2 ஸ்பூன்
சீரகம் 3 ஸ்பூன்.
பின்னர் அரிசியை கழுவுங்கள் . பாசிப்பருப்பையும் கழுவுங்கள். பிறகு குக்கரில் இரண்டையும் சேர்த்தே வேகவைக்கவும்.
குக்கரில் விசில் வர 10 நிமிஷம் ஆகும். அதற்குள் ஒரு பெரிய வாணலியில் ஆவின் பட்டரை போட்டு உருக்குங்கள். வெண்ணெய் முழுவதும் நெய் ஆகி விடவேண்டும். இப்போது நெய் கொதி நிலைக்கு வந்து விட்டதை ஊர்ஜிதம் செய்யுங்கள்.
இப்போது நெய்யில் ஒரு சிட்டிகை உப்பு, உடைத்த மிளகு மற்றும் சீரகத்தை நெய்யில் போட்டு தாளியுங்கள். இப்போது நீங்கள் 100 கிராம் முந்திரி பருப்பை போட்டு கிளருங்கள். முந்திரி கலர் மாறும்போது… குக்கரில் இருந்து அரிசி பருப்பு கலவையை (வெந்து இருக்கும்) நெய்யில் போட்டு பொங்கலை நன்கு கிளறுங்கள்.
கேஸை சிம்மில் வைத்து பொங்கலை நன்கு கிளருங்கள். உங்களுக்கு நெய் வாடை வரும். சுமார் 10 நிமிடங்கள் கழித்து கேஸை அணைத்துவிடுங்கள்.
இப்போது உங்களுக்கு நெய் பொங்கல் ரெடி. எல்லோருக்கும் பறிமாறுங்கள். எல்லோரும் சூப்பர் என்பார்கள்.
நெய் பொங்கலுக்கு சாம்பார்தான் சரியான சைட் டிஷ். சிலருக்கு தேங்காய் செட்னிதான் பிடிக்கும்.
எனவே தேங்காய் செட்னி மற்றும் சாம்பார் ரெடியாக வைத்து இருப்பது நன்று. தேங்காய் செட்னி மற்றும் சாம்பார் செய்வது எப்படி என்று பின்னர் பார்ப்போம்.
பொங்கல் பொதுவாக வயிற்றை நிரப்பிவிடும். உண்ட தொண்டனுக்கும மயக்கம் வரும். அதுவும் நெய் பொங்கல் சாப்பிட்டால் சற்று படுக்க தோன்றும். குழந்தைகளுக்கு இந்த பிரச்னை இல்லை. பெரியவர்கள் தான் உறங்க நினைப்பது வழக்கம். எனவே பொங்கலை ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் செய்து பாருங்கள்.