பூரிப்பு தரும் பூரி வகைகள்: புத்தாண்டு இனிதே தொடங்கட்டும்!

Poori recipes
Special Poori recipes
Published on

காரிருளைக் கிழித்துவரும்

கதிரவன் அழகா?

கொதிக்கும் எண்ணையில்

குளித்து வரும் பூரி அழகா??

எனக்குள் விவாதம் முடியவில்லை!!

பூரின்னுசொன்னாலே

முகமெல்லாம் பூரிப்புத்தான்...

இந்தப் புத்தாண்டு தினத்தன்று வித்தியாசமாக ஸ்டஃப்டு பூரி, மீட்டா பூரி செய்து புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாடுவோம்.

முதலில்

மீட்டா பூரி

கோதுமை மாவுடன் நெய், உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து சிறு பூரிகளாகத் திரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பாலை சுண்டக் காய்ச்சி, சர்க்கரை சேர்த்து கரைந்ததும் இறக்கி ஆறவைத்து , அதில் பொடியாக நறுக்கிய பழங்கள் (வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு திராட்சை) பொடியாக நறுக்கிய முந்திரி சேர்த்து பூரி மீது ஊற்றி பரிமாறவும். சுவையை மேலும் கூட்ட சிறிதளவு வெனிலா கஸ்டர்ட் பவுடரை அரை கப் பாலில் கரைத்து கொதிக்கும் பாலில் சேர்க்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

ஸ்டஃப்டு பூரி

ஸ்டப்பிங் செய்ய.. உருளைக்கிழங்கு 2

கேரட் 1, பீன்ஸ் 8 ,பச்சைப்பட்டாணி கைப்பிடி அளவு பெரிய வெங்காயம் ஒன்று

இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன்

உப்பு எண்ணெய் தேவையான அளவு.

கோதுமை மாவுடன் பால், உப்பு தேவையான தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கி மசிக்கவும். கேரட் பீன்ஸ் வெங்காயத்தை சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து, வெங்காயம், கேரட், பீன்ஸ் பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கி, பிறகு இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாடை நீங்க நன்கு வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
கேரட் இருந்தா போதும்! சட்டுன்னு செய்யுங்க நாவில் கரையும் 'கேரட் டிலைட்'!
Poori recipes

கடைசியில் மசித்த உருளைக்கிழங்கு, கரம் மசாலா தேவையான உப்பு சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறி இறக்கவும். மாவில் சிறு உருண்டை எடுத்து சிறிய கிண்ணம் போல் செய்து அதனுள் சிறிதளவு கிழங்குக் கலவையை வைத்து மூடி உருட்டி சிறிய பூரியாக அழுத்தாமல் தேய்க்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு தேய்த்து வைத்துள்ள பூரிகளைப் பொரித்து எடுக்கவும்.

(இந்த பூரிக்குள்ளேயே மசாலா இருப்பதால் தொட்டுக்கொள்ள நீங்கள் எந்த சைட் டிஷ்ஷையும் செய்யத் தேவையில்லை)

கண்டிப்பாக இந்த இரண்டு பூரி வகைகளையும் புத்தாண்டு தினத்தன்று செய்து குடும்பத்தினரிடம் சபாஷ்களை அள்ளுங்கள்.

அழகான ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com