
இக்கோடையில் நம் உடலைக் குளிர்ச்சியாக வைக்கக் கூடியது சொல்காதி பானம். இது கோவாவைச் சேர்ந்த பானமாகும். கோடையில் சிறப்புப் பானமாக கோவாவில் இது கருதப்படுகிறது. இந்த பானத்தில் கோகமும் சேர்க்கப்படுகிறது. 0 சதவீதம் அளவே சர்க்கரை உள்ள இந்த பானம் குடித்தால், குளிர்ச்சியாக இருக்கும்.
சொல்காதி என்னும் பானத்தில் தேங்காய் பாலும் சேர்க்கப்படுகிறது. புளிப்புச் சுவைக்கு கோக்கம் இதில் சேர்க்கப்படுகிறது. இது தேங்காய்ப் பாலை பாலன்ஸ் செய்வதோடு நல்ல சுவையையும் தருகிறது. மேலும் கோக்கம் நல்ல செரிமானத்தையும் தருகிறது. இந்த பிங்க் நிறப்பானம் செரிமானம், இதய ஆரோக்கியம் மற்றும் சருமத்திற்கும் மிகச் சிறந்ததாகும்.
சொல்காதி பானம் தயாரிப்பு
கோகம்- 2
தண்ணீர்- 2 கப்
பால்- ஒன்றரை கப்
மல்லித்தழை- 2 டேபிள் ஸ்பூன்
உப்பு- ஒரு டீஸ்பூன்
சீரகம்- ஒரு டீஸ்பூன்
பூண்டு- 3
காஷ்மீர் மிளகாய்- 2
கடுகு- ஒரு டீஸ்பூன்
செய்முறை
கோகத்தை நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இதில் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். சுமார் 30 நிமிடம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு கையால் கோகத்தை நன்கு பிசைந்து தண்ணீரில் கரையும் அளவிற்கு செய்யுங்கள். பிறகு இதை வடிகட்டுங்கள்.
இதில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து இதில் ஒரு கப் நன்கு கெட்டியான தேங்காய் பால் சேர்க்கவும். மேலும் அரை கப் தேங்காய்ப் பால் சேர்க்கலாம். ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு சேர்த்து வெடித்ததும் சீரகம் சேர்க்கவும்.
பிறகு கறிவேப்பிலை பொடி செய்து சேர்த்து, சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காயம் ஒரு சிட்டிகை சேர்த்து இதை கோகம் மற்றும் தேங்காய் பால் கலவையில் சேர்க்கவும். பிறகு மல்லித்தழை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிட மிகச் சுவையாக இருக்கும். கோடையில் நல்ல குளிர்ச்சியைத் தரக்கூடியது.