முட்டை இல்லாமல் ஹனி கேக் செய்வது எப்படி? செம டேஸ்ட்! 

honey cake
ஹனி கேக்
Published on

இனிப்புகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் குறிப்பாக கேக் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு வகையாகும். ஆனால் முட்டை மற்றும் ஓவன் இல்லாமல் கேக் செய்வது எப்படி என்று பலருக்குத் தெரியாது. இனி அந்த கவலை வேண்டாம்! இந்தப் பதிவில் குக்கரில் முட்டை இல்லாமல் எளிதாக ஹனி கேக் எப்படி செய்வது என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். தேவையான பொருட்கள்:

  • மைதா மாவு - 1 கப்

  • ரவை - 1/2 கப்

  • சர்க்கரை - 1/2 கப்

  • தயிர் - 1/2 கப்

  • எண்ணெய் - 1/4 கப்

  • பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி

  • பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி

  • உப்பு - 1/4 தேக்கரண்டி

  • ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி

  • தேன் - 2 தேக்கரண்டி (தேவைப்பட்டால்)

செய்முறை: 

முதலில் ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, ரவை, சர்க்கரை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். அடுத்ததாக அந்த கலவையில் தயிர் மற்றும் எண்ணெய் சேர்த்து மென்மையான மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பின்னர் அந்த மாவில் ஏலக்காய் தூள் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளுங்கள். 

இப்போது குக்கர் ஒன்றை அடுப்பில் வைத்து, அடியில் லேசாக வெண்ணெய் தடவி தயாரித்து வைத்துள்ள மாவை அதில் ஊற்றவும். பின்னர் குக்கர் மூடியில் உள்ள கேஸ்கட் மற்றும் விசிலை நீக்கி குக்கரில் மூடி, மிதமான தீயில் சுமார் 20-25 நிமிடங்கள் வேக வைக்கவும். 

கேக் நன்றாக வெந்ததும் அடுப்பை அனைத்து 5 நிமிடங்கள் அப்படியே ஆற வைத்த பின்னர் வேறு தட்டிற்கு கேக்கை மாற்றி, உங்கள் விருப்பம் போல மேலே அலங்கரித்து சூடாக பரிமாறலாம். நீங்கள் விருப்பப்பட்டால் கேக்கில் ஜாம், தேன் அல்லது சுகர் சிரப் தடவி சாப்பிடலாம். 

இதையும் படியுங்கள்:
சூப்பரான சுவையில் மராத்தி ஸ்பெஷல் ஹரீரா-பிரெட் மில்க் கேக் செய்யலாம் வாங்க!
honey cake

குறிப்புகள்: 

கேக்கின் மேல் பகுதி பொன்னிறமாக மாறும் வரை வேக வைக்கவும். கேக் வெந்துவிட்டதா என்பதை சரி பார்க்க, ஏதேனும் குச்சி அல்லது டூத் பிக் பயன்படுத்தி குத்திப் பார்க்கவும். 

இந்த கேக்கை உங்கள் விருப்பம் போல 3-4 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். அதற்கு மேல் பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். கேள்விகள் ஏதேனும் இருந்தால் தயவு செய்து கமெண்டில் தெரியப்படுத்துங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com