இன்னைக்கு சுவையான மராத்தி ஸ்பெஷல் ஹரீராவும், பிரட் மில்க் கேக் எப்படி சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.
ஹரீரா செய்ய தேவையான பொருட்கள்;
அரிசி-1 தேக்கரண்டி.
கசகசா-சிறிதளவு.
பாதாம்-15.
சக்கரை-1கப்.
ஏலக்காய்-2
நெய்-1 தேக்கரண்டி.
பட்டை-1துண்டு.
தேங்காய் பால்-2 கப்.
துருவிய பாதாம்-சிறிதளவு.
ஹரீரா செய்முறை விளக்கம்;
பாதாம் 15 ஐ முதல் நாளே ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். அரிசி 1 தேக்கரண்டி, கசகசா சிறிதளவு, ஏலக்காய் 2 சேர்த்து இதையெல்லாம் மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேங்காய் பால் 2 கப்பை சேர்த்து பட்டை1, நெய் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக சுண்ட விடவும். இப்போது அரைத்து வைத்திருக்கும் பாதாம் பேஸ்ட்டை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். சக்கரை 1கப் சேர்த்து கிண்டி கடைசியாக பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பாதாமை தூவி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான மராத்தி ஸ்பெஷல் ஹரீரா தயார். நீங்களும் இந்த ரெசிப்பியை வீட்டிலே டிரை பண்ணி பாருங்கள்.
பிரட் மில்க் கேக் செய்ய தேவையான பொருட்கள்;
பிரட்-5
பால்-300ml.
சக்கரை-1/2 கிலோ.
ஏலக்காய்-1 தேக்கரண்டி.
பால் பவுடர்-1கப்.
நெய்-1 தேக்கரண்டி.
பிரட் மில்க் கேக் செய்முறை விளக்கம்;
முதலில் 5 பிரட்டை துண்டு துண்டாக பிய்த்து மிக்ஸியில் அரைத்து அதை ஒரு ஃபேனில் போட்டு 3 நிமிடம் வறுத் தெடுக்கவும். இப்போது ஃபேனில் சக்கரை 1/4கப் சேர்த்து கரைய விட்டு பால் 300ml சேர்த்து நன்றாக கிண்டி விடவும். அதில் சக்கரை 1/4கப்பை சேர்த்துவிட்டு வறுத்து வைத்திருக்கும் பிரட்டை சேர்த்து கிண்டவும். ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி, பால் பவுடர் 1கப், நெய் 1 தேக்கரண்டி சேர்த்து கிண்டவும். நன்றாக திரண்டு வந்ததும் ஒரு பாத்திரத்தில் கொட்டி செட் செய்து ஆறியதும் சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி பரிமாறவும். இப்போது சுவையான பிரட் மில்க் கேக் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.