கலாகண்ட் மில்க் ஸ்வீட்
கலாகண்ட் மில்க் ஸ்வீட்

கலக்கலான கலாகண்ட் மில்க் ஸ்வீட் செய்யலாம் வாங்க!

ஸ்வீட் கடைகளில் கலாகண்ட் பால் ஸ்வீட்டை வாங்கி சாப்பிட்டிருப்போம். பார்ப்பதற்கு ரொம்ப ரிச்சாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த இனிப்பை செய்வதற்கு குறைந்த நேரமே ஆகும். இந்த ஸ்வீட்டை கடையில் இருக்கும் அதே சுவையில் வீட்டிலேயே செய்யலாம் வாங்க.

கலாகண்ட் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

பால்-2 லிட்டர்.

எழுமிச்சை சாறு-1/2 மூடி.

ஜீனி-1 கப்.

நெய்-4 தேக்கரண்டி.

ஏலக்காய் தூள்- சிறிதளவு.

கலாகண்ட் செய்முறை விளக்கம்:

ரு அகலமான பாத்திரத்தில் 2 லிட்டர் பாலை ஊற்றி பாலை நன்றாக கொதிக்க விடவும். பாலை நன்றாக கலந்து விட்டு சுண்ட விடவும். பால் நன்றாக சுண்டியதும் அதில்  ½ மூடி  எழுமிச்சைப்பழ சாறை சேர்க்கவும். இப்போது பாலை நன்றாக கிண்டிக்கொண்டேயிருக்கவும். பால் திரிய ஆரமிப்பதை காணலாம். இப்போது சக்கரை 1 கப்பை சேர்த்து அக்கலவையை நன்றாக கிண்டிக் கொண்டேயிருக்கவும். சக்கரை பாலுடன் கலந்து சற்று கரைந்து பின் கட்டியாக தொடங்கும். கடைசியாக நெய் 4 தேக்கரண்டியை சேர்க்கவும். வாசனைக்காக ஏலக்காய் தூள் சிறிது சேர்க்கவும். இப்போது ஸ்வீட் நன்றாக திரண்டு வரும்.

இதையும் படியுங்கள்:
பூசணிக்காய் சூப் செய்யத் தெரியுமா உங்களுக்கு? வேற லெவல் டேஸ்ட்! 
கலாகண்ட் மில்க் ஸ்வீட்

இந்த சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கி ஒரு மூடியுள்ள பாத்திரத்தில் நெய் தடவி அதில் மாற்றி விட்டு மூடி வைத்து விடவும். இந்த ஸ்வீட்டை ஒரு 4 மணி நேரம் அப்படியே ஆற விடவும். இப்போது ஸ்வீட்டை ஒரு தட்டுக்கு மாற்றி சின்ன துண்டுகளாக வெட்டவும். அதன் மீது பிஸ்தா தூவி அலங்கரித்து பரிமாறலாம். சுவையான பால் ஸ்வீட் கலாகண்ட் தயார்.

இந்த இனிப்பிற்கு அழகே அதனுடைய கோல்டன் பிரைவுன் நிறம்தான். இது முழுவதுமே பாலால் செய்ததால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com