
தேவையான பொருட்கள்:
பலாச்சுளை - 4, சர்க்கரை - 1 கப், நெய் - 2 மேஜைக்கரண்டி, கோதுமை மாவு - 1 மேஜைக்கரண்டி, முந்திரிப் பருப்பு - 8, ஏலக்காய்ப் பொடி – ½ டீஸ்பூன்.
செய்முறை:
கோதுமை மாவை, சிவக்கும்வரை நன்கு வறுத்துத் தனியே வைத்துக்கொள்ளவும். பலாச்சுளைகளை மிக்ஸியில் நன்கு விழுதாக அரைத்துக்கொள்ளவும். விழுதுடன் சர்க்கரையைச் சேர்த்து, அடுப்பில் வைத்து, மிதமானத் தீயில், தண்ணீர் சுண்டும்வரை கிளறிக்கொண்டே இருக்கவும். நன்கு சுண்டி வரும்போது, வறுத்த கோதுமை மாவைக் கொஞ்சம், கொஞ்சமாகத் தூவி, கெட்டிப் பதம் வரும்போது நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும். ஏலப்பொடி சேர்க்கவும்.
முந்திரிப் பருப்பைத் துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து, அனைத்தையும் ஒன்றாகக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி, ஆறியபின் துண்டுகளாகப் போடவும்.