கேரளாவின் பிரபலமான கலந்தப்பம் செய்வது எப்படி?

Kerala special recipes...
healthy snacks...Image credit - youtube.com
Published on

தேவையான பொருட்கள்: 

பச்சரிசி 1 கப்

வடித்த சாதம் 1/4 கப்

தேங்காய் பல் 1/2 கப்

பெரிய வெங்காயம் நறுக்கியது 1 கப்

ஜீரகம் 1 தேக்கரண்டி

ஆப்ப சோடா - 1/4 தேக்கரண்டி

ஏலக்காய் 2

நறுக்கிய முந்திரி 20 கிராம்

வெல்கம் 1 கப்

எண்ணெய் தேவையான அளவு

பச்சரியை நன்கு களைந்து கழுவிவிட்டு 3 மணிநேரம் ஊறவைத்து மிக்ஸி ஜாரில் அரைக்க எடுத்துக்கொள்ள வேண்டும். ஜாரில் வடித்த சாதம், ஏலக்காய், ஜீரகம் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் சிறிது சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய தேங்காய் பல் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். பிறகு   பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து  வெல்லப்பாகு தாயார் செய்ய வேண்டும். ஒரு கப் வெல்லத்தை அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். வெல்லம் நன்கு கரையவிட்டு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது எண்ணெய் தடவிய குக்கரில் வெல்லப்பாகை சிறிது சிறிதாக மாவு கலவையினுள் மெதுவாக ஊற்றி கெட்டி படாமல் கலக்க வேண்டும். வெல்லப்பாகை அப்படியே ஊற்றினால் கட்டியாக மாறிவிடும் அதனால் அப்படி ஊற்றுவதை தவிர்க்க வேண்டும். அதன் பின் எண்ணையில் வறுத்து வைத்து இருக்கும் தேங்காய்ப்பல், வெங்காயம் இவற்றையும் நறுக்கிய முந்திரியையும் இதனுடன் சேர்த்து கலக்க வேண்டும். இதனுடன் கால் தேக்கரண்டி ஆப்ப சோடா சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய 5 சத்தான லட்டுகள்!
Kerala special recipes...

இப்பொழுது குக்கரை மூடி, விசில் இல்லாமல் அடுப்பில் வைக்கவும். புதிதாக செய்பவர்கள் அடி பிடிக்கும் என்ற பயம் இருந்தால் ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடானதும் அதன் மேல் குக்கரை 10 -15 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைக்க வேண்டும். கலந்தப்பம் வெந்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி பரிமாறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com