

தேவையானவை :
மணத்தக்காளி கீரை -1கட்டு
சின்ன வெங்காயம் -8-10
பூண்டு - 6
கெட்டியான முதல் தேங்காய் பால்
இரண்டாம் பால்
அரிசி கழுவிய தண்ணீர் - தலா ஒரு கப்
உப்பு ருசிக்கு
தாளிக்க - எண்ணைய்
கடுகு -1டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
வெந்தயம் -1/2டீஸ்பூன்.
செய்முறை :
கீரைச் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.குக்கரில் எண்ணெய் காய விட்டு தாளிக்கவும்.பின் இரண்டாக நறுக்கிய வெங்காயம் பூண்டு, சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இரண்டாம் பால் அரிசி மண்டி சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும் . இதில் கீரையை ப் போட்டு மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும். சற்று ஆறியதும் முதல் பாலைச் சேர்க்கவும். நன்கு கலந்து பரிமாறவும்.
இந்த மண்டியை சாதத்துடன் சாப்பிடலாம்.வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை ஆற்றும். கோடை சீசனில் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
வாழைத்தண்டு மோர்
சுளிக்காமல் மோர்- 1டம்ளர்
நறுக்கிய வாழைத்தண்டு - 1/4கப்
கொத்தமல்லி - கொஞ்சம்
உப்பு -தேவையானது
பூண்டு -1
சின்ன வெங்காயம் -1
எல்லாப் பொருட்களையும் மோர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அருந்தவும்.
பூண்டை விரும்பாதவர்கள் தவிர்த்து விடலாம்.சிறுநீரக பிரச்சனைகளை தீர்ப்பதில் இந்த வாழைத்தண்டு மோர் சிறப்பாக உதவி புரிகிறது.