healthy recipes
Protein-rich peanut balls

புரதச் சத்து நிறைந்த வேர்க்கடலை உருண்டை செய்வது எப்படி?

Published on

வேர்க்கடலை உருண்டை

தேவையான பொருட்கள்;

வேர்க்கடலை வறுத்து சலித்தது— 1 கப்

வெல்லம் — ¾ கப் துருவியது

நெய் — 1 டீஸ்பூன்

ஏலக்காய்தூள் — ¼ டீஸ்பூன்

உப்பு — ஒரு சிட்டிகை

வெண்ணெய் _ ஒரு சிட்டிகை

செய்முறை: வேர்க்கடலையை வறுத்து மஞ்சள் பழுப்பு நிறமாகும் வரை வறுக்கவும். வறுத்தவுடன் சலித்து தோலை அகற்றிவிட்டு மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை ¼ கப் தண்ணீருடன் சேர்த்து மிதமான தீயில் வெல்லம் கரையும் வரை சூடாக்கவும். வெல்லம் கரைந்ததும் ஒரு சல்லடையில் அரித்து பின்னர் அடுப்பில் வைத்து ஒரு துளி கம்பி பருவம் வரும் வரை காய்த்து அத்துடன் நெய் மற்றும் ஏலக்காய்தூள் சேர்த்து நன்றாக கிளறவும். இந்த வெல்லம் சீஸ் போல் ஆன நிலையில் இருக்கும்போது அதில் பொடித்த வேர்க்கடலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கலவை ஒரு சேரும் வரை நன்கு கிளறி, கலந்துவிடவும்.

பின்னர் சிறிது நெய் விட்டு கரண்டியால் கிளறி சிறு சூட்டுடனே உருண்டைகள் செய்து எடுக்கவும். ஒவ்வொரு உருண்டையும் ஒரே வடிவத்தில் இறுக்கமாக, சரியான பிணைப்புடன் இருக்க வேண்டும். உருண்டைகள் நன்றாக உறையும் வரை அவைகளை ஒன்றுடன் ஒன்று ஓட்டாமல் ஒரு விரிந்த பாத்திரத்தில் வைத்துக் குளிர்ந்த இடத்தில் வைத்து நன்கு ஆறியதும் airtight பெட்டியில் வைத்து 7முதல் 10 நாள் வரை துணிச்சலாகச் சேமிக்கலாம். வெல்லத்தின் அளவை சுவைக்கு ஏற்ப மாற்றலாம். அதிக இனிப்பு விரும்பினால் அதிகரிக்கலாம். இது புரதச்சத்து அதிகம் நிரம்பியது

எள்ளுருண்டை

தேவையான பொருட்கள்:

வெள்ளை அல்லது கருப்பு எள் – 1 கப்

வெல்லம் – ¾ கப்

நீர் – 2 டேபிள் ஸ்பூன்

நெய் – 1 டீஸ்பூன்

ஏலக்காய்பொடி – ¼ டீஸ்பூன்

இதையும் படியுங்கள்:
பக்குவமான ஜிலேபி! மாவு கரைப்பதில் இருந்து பாகு காய்ச்சுவது வரை டிப்ஸ்!
healthy recipes

செய்முறை: முதலில் ஒரு கடாயில் எள்ளை வறுக்கும் போது எள் சிறிது துள்ளி பறக்கும் வரை வறுக்க வேண்டும். பின்னர் அதை குளிரவிடவும். வெல்லத்தை சிறு துண்டுகளாக உடைத்து, 2 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து கரைக்கவும். மிதமான தீயில் வெல்லம் கரைந்து பாகம் பதமாக ஆகும் வரை சமைக்கவும். ஒரு துளி பாகத்தை நீரில் விடும்போது உருண்டையாக வரும் நிலை வந்தால் சரியான பாகம் வந்தது. இப்போது அந்த பாகத்தில் வறுத்த எள், ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து நன்றாக கலக்கவும். கலவையை சூடாக இருக்கும்போதே சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். குளிர்ந்த பிறகு டப்பாவில் சேமிக்கலாம். ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.

தேங்காய் கெட்டி உருண்டை

தேவையான பொருட்கள்:

புதிதாக துருவிய தேங்காய் – 1 கப்

சர்க்கரை – ¾ கப்

பால் – 2 டேபிள் ஸ்பூன்

நெய் – 1 டீஸ்பூன்

ஏலக்காய்பொடி – ¼ டீஸ்பூன்

செய்முறை: ஒரு தடிமனான கடாயில் தேங்காயை போட்டு சிறிது வறுத்து, துருவலின் ஈரப்பதம் போக விடவும். அதன் பிறகு சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கிளறத் தொடங்கவும். சர்க்கரை உருகி தேங்காயுடன் கலந்து, கலவை கெட்டியாக ஆகும் வரை சமைக்கவும். பால் சேர்க்க விரும்பினால் இதே நேரத்தில் சேர்க்கலாம்; அது மென்மையான சுவை தரும்.

கலவை பாத்திரத்தின் அடிப்பகுதியில் ஒட்டாமல் வரும்போது நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்க்கவும். தீயை அணைத்து உடனே சிறு உருண்டைகளாக உருட்டி தட்டில் வைக்கவும். குளிர்ந்தவுடன் “தேங்காய் கெட்டி உருண்டை” தயார். இது 3–4 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com