
பஞ்சாபின் பாரம்பரிய உணவான பஞ்சாப் மாத்ரி, ஓமம், மிளகு, கசூரி மேத்தி, சீரகம், மைதா மற்றும் கோதுமை மாவில் தயாரிக்கப்படுகிறது.
தயாரிப்பு முறை:
மூன்று டேபிள் ஸ்பூன் நெய்யை சூடாக்கி இறக்கவும்.
கீழ்க்கண்ட பொருட்களை ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்க்கவும்.
மைதா மாவ. 2கப்
கௌதுமை மாவு அரை கப்
2/டீஸ்பூன். ஓமம்
இரண்டு டீஸ்பூன் மிளகு. கொர கொரப்பாக பொடித்து
2டீஸ்பூன். கசூரி மேத்தி
ஒரு டீஸ்பூன் சீரகம்
ஓரு சிட்டிகை பெருங்காயம்
ஒரு சிட்டிகை. பேக்கிங் சோடா
உப்பு - தைவையானது.
அரை டீஸ்பூன் மிளகாய் பொடி
அரை டீஸ்பூன் மஞ்சள் பொடி
கால் டீஸ்பூன் கரம் மசாலா பௌடர்
மேற்கூறிய அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலக்கவும். இக்கலவையை நன்றாக கவக்கவும். இக்கலவலயில் சிறிது கூட கட்டி மில்லாமல் நன்றாக கலக்கவும். பிறகு சிறிது சிறிதாக நீர்விட்டு கெட்டியாக பிசையவும். சப்பாத்திக்குக்குப் பிசைவதுபோல் மாவை மென்மையாக்க வேண்டாம். இதை அரை மணிநேரம் வைத்து விடுங்கள்.
இப்போது இக்கலவையிலிருந்து மாவை எடுத்து சிறு உருண்டையாக எடுத்து அதை அமுக்கவும். இது வட்டமாக இருக்க அவசியமில்லை. பிறகு ஒரு ஊசியால் இதில் சில இடங்களில் குத்தவும். நீங்கள் இதை முக்கோண வடிவிலும் செய்யலாம். அடுப்பில் எண்ணை வைத்து மீடியமாக எரியவிட்டு அதில் போட்டு கோல்டன் ப்ரௌன் கலரில் இரண்டு பக்கமும் வேகவைக்கவும். இந்த பஞ்சாப் மாத்ரி கரகர வென்று மிகவும் சுவையாக இருக்கும்.
பாலக் பன்னீர் சிலா
புரதமும் இரும்புச் சத்தும் நிறைந்த பாலக் பன்னீர் சிலா எப்டி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானவை:
ஒரு கப். பயத்தம் பருப்பு 3. மணி நேரம். ஊறவைத்தது.
கீரை ஒரு கப் அரிந்தது
ஒரு டேபிள் ஸ்பூன் அரிந்த. இஞ்சி
ஒரு பச்சை மிளகாய் பொடியாய் அரிந்தது
ஒரு டீஸ்பூன் பூண்டு
வெங்காயம் அரிந்து 1
தக்காளி அரிந்தது 1
பன்னீர். 100கிராம்
கொத்த மல்லி தழை
செய்முறை:
மிக்சியில் ஊறவைத்த பயத்தம் பருப்பு, ஒரு கப் அரிந்த கீரை, இஞ்சி, பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து சிறிது நீர்விட்டு நல்ல மிருதுவாக அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு பௌலில் சேர்த்து அதில் உப்பு சேர்க்கவும்.
இன்னொரு பௌலில் நன்கு அரிந்த கொத்தமல்லி, தக்காளி மேலும் துருவிய பன்னீர் சேர்க்கவும்.
ஒரு தோசைக்கல்லில் எண்ணை தடவி அரைத்த பயத்தம் பருப்பு விழுதை வட்டமாக ஊற்றவும். பெரிதாக ஒன்றோ அல்லது சிறியதாக இரண்டு அல்லது மூன்று தயாரிக்கலாம். இப்போது இந்த விழுதின் மீது இன்னொரு பௌலில் இருக்கும் தக்காளி பன்னீர் கலவையை அதன் மீது தூவவும். இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
சட்னியுடன் சேர்த்து சாப்பிட இந்த பாலக் பன்னீர் சில்லா மிகச் சுவையாக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியமானது.