ஸ்மோக்கி தக்காளி - குடைமிளகாய் சட்னி செய்வது எப்படி?

ஸ்மோக்கி தக்காளி - குடைமிளகாய் சட்னி செய்வது எப்படி?
ஜெயகாந்தி மகாதேவன்

என் பெயர் ஜெயகாந்தி. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து பள்ளி இறுதி வகுப்பு வரை அங்கு பயின்று வந்தேன். பிறகு என் பதினெட்டாவது வயதில் சென்னைக்கு குடி பெயர்ந்தேன். அங்கு தட்டெழுத்து சுருக்கெழுத்து பயின்று சுமார் நாற்பது ஆண்டுகள் வெவ்வேறு இடங்களில் பணி புரிந்து, ஓய்வு பெற்றுள்ளேன். அதன் பின் எழுத்தில் ஆர்வம் கொண்டு சில பெண்கள் பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன். கல்கி குழுமத்தினரின் ஊக்குவிப்பால் சிறுகதை, கவிதை, கட்டுரை என பல தலைப்புகளிலும் எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Updated on: 

தேவை:

தக்காளி 4, குடைமிளகாய் 1, முழு பூண்டு 1, பச்சை மிளகாய் 4, வருத்த சீரகத் தூள் அரை டீஸ்பூன், லெமன் ஜூஸ் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:

கேஸ் ஸ்டவ்வை எரியவிட்டு அதன் மேலுள்ள ஸ்டாண்டில் தக்காளிப் பழங்களை வைத்து, நன்கு திருப்பிவிட்டு தோல் கருகும் வரை சுட்டெடுக்கவும். அதேபோல் பூண்டு, குடைமிளகாய், பச்சை மிளகாய்களையும் சுட்டெடுக்கவும். பின் அனைத்தும் நன்கு ஆறியதும் கருகிய தோலை சுத்தமா பிய்த்தெடுத்துவிடவும். மிக்ஸியில் உப்பு, சீரகத்தூளுடன் சுட்டெடுத்த பொருள்கள் அனைத்தையும் கிள்ளிக்கிள்ளிப் போட்டு அரைக்கவும். அரைத்ததை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து உபயோகிக்கவும். ஸ்மோக்கி வாசனையுடன் ஒரு வித்யாசமான சட்னி! செய்துதான் பாருங்களேன்.

logo
Kalki Online
kalkionline.com