புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

Soya Keema
Soya Keema
Published on

சோயா கீமா என்பது சுவையாகவும், உடலுக்குத் தேவையான புரதத்தைத் தரும் ஒரு அற்புதமான உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு மட்டுமின்றி, போதுமான புரதம் சாப்பிட விரும்புபவர்களுக்கும் ஏற்றதாகும்.‌ இந்த சோயா கீமாவை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். இந்தப் பதிவில் எளிதான முறையில் சோயா கீமா எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

சோயா கீமா செய்யத் தேவையான பொருட்கள்:

  • சோயா ரொட்டி - 1 கப்

  • வெங்காயம் - 2 (நறுக்கியது)

  • தக்காளி - 2 (விழுதாக அரைத்தது)

  • பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)

  • இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

  • எண்ணெய் - 2 தேக்கரண்டி

  • கடுகு - 1/2 தேக்கரண்டி

  • கர்ரி இலை - 1

  • சீரகம் - 1/2 தேக்கரண்டி

  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

  • தனியா தூள் - 1 தேக்கரண்டி

  • கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

  • உப்பு - தேவைக்கு

  • கொத்தமல்லி இலை - நறுக்கியது (அலங்கரிக்க)

செய்முறை:

முதலில் சோயா ரொட்டிகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் போதுமான அளவு வெந்நீர் ஊற்றி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் உரிய சோயா ரொட்டிகளை தண்ணீரில் இருந்து எடுத்து அதிகப்படியான தண்ணீரை பிழிந்து எடுத்து உதிரி உதிரியாக மசித்துக் கொள்ளவும். 

அடுத்ததாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை, சீரகம் போட்டு தாளிக்கவும்.‌ பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். 

இதையும் படியுங்கள்:
மஞ்சள் காமாலை இல்லாமலேயே கண்கள் மஞ்சள் நிறமாக மாறுமா?
Soya Keema

பின்னர் தக்காளி விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். 

வதக்கிய மசாலாவில் மசித்து வைத்த சோயா ரொட்டியை சேர்த்துக் கிளறவும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரேவியாக மாறும் வரை கொதிக்க விடவும். இறுதியில், அதில் கொத்தமல்லித் தழை தூவி கிளறினால் சூப்பர் சுவையில் சோயா கீமா தயார். 

இந்த சூப்பரான ரெசிபியை இன்றே முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.‌

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com