கமகமக்கும் பூண்டு ஊறுகாய்! ஈஸியாக எப்படி செய்வது தெரியுமா?

Garlic pickle
Garlic pickleImg Credit: Smitha kalluraya
Published on

ஊறுகாய் இன்றி சாப்பாடு முழுமை பெறாது. பலருக்கும் தினமும் ஊறுகாய் வைத்து சாப்பிட்டாலே பிடிக்கும். விருந்து முதல் சின்ன விஷேசம் வரை அனைத்து சாப்பாடு வகையிலும் ஊறுகாய் கட்டாயம் இடம்பெறும். சிலருக்கு சாப்பாடுக்கு சைட்டிஷ் இல்லையென்றாலும் ஊறுகாய்யை வைத்து சாப்பிடுவார்கள். சிலர் கஞ்சி, ஊறுகாயை வைத்தே வாழ்க்கையை கழித்திருப்பார்கள்.

அப்படி முக்கிய பங்கு வகிக்கும் ஊறுகாயை செய்ய நாள் கணக்கு ஆகும் என்று தான் பலருக்கும் தெரியும். ஊறுகாயில் போடும் காயை உப்பு போட்டு ஊற வைத்து செய்ய வேண்டும். அப்படி டேஸ்டில் அள்ளும் பூண்டு ஊறுகாயை எளிதில் எப்படி செய்வது என்று பார்க்கலாம். பூண்டு ஊறுகாய் பலருக்கும் பேவரைட் என்றே சொல்லலாம். ஏனென்றால் பூண்டு வாசனை ஊறுகாயில் மணக்கும். இதனால் பசியும் அதிகரிக்கும் என்றே சொல்லலாம்.

பொதுவாகவே பூண்டுக்கு பல்வேறு நற்குணங்கள் உள்ளன. பூண்டில் இருக்கும் கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் செரிமான கோளாறு சரி செய்வதில் இருந்து கொலஸ்ட்ரால் குறைப்பது வரை உதவியாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பூண்டு ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பல 100 ஆண்டுகளாக இந்திய சமையலில் பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கார்டியோவாஸ்குலர் என்று சொல்லப்படும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் பூண்டு மிகப் பெரிய பங்கை வகிக்கிறது. பூண்டில் இருக்கும் பண்புகள் மற்றும் ஊட்டச்சத்துகள் கொலஸ்ட்ரால் மட்டுமல்லாமல் கொழுப்பைக் குறைக்கிறது.

அப்படிப்பட்ட கமகமக்கும் பூண்டு ஊறுகாயை ஈஸியாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பூண்டு, நல்லெண்ணை, கடுகு, வெந்தயம், மிளகாய் தூள், மஞ்சள் பொடி, உப்பு, புளி, வெல்லம்.

அனைத்தும் தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
Kerala Poondu Thokku: இப்படி ஒரு தொக்கு இதுவரை செஞ்சிருக்க மாட்டீங்க! 
Garlic pickle

செய்முறை :

வெந்தயத்தையும், கடுகுகையும் நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து அதை மிக்ஸியில் அரைத்து கொள்ளுங்கள். தற்போது பூண்டு தோல் நீக்கி, அதை நன்றாக எண்ணெய்யில் வறுத்து அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். புளியை கொஞ்சம் கரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் கடுகு போட்டு, கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும். பின்பு அதில் பூண்டு சேக்கவும், தொடர்ந்து, கடுகு – வெந்தயம் அரைத்ததை சேர்க்கவும். அதன் பிறகு மிளகாய் பொடி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும். பின்பு புளி தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு கடைசியாக சிறிது வெல்லம் சேர்த்து இறக்கினால் கமகமக்கும் பூண்டு ஊறுகாய் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com