Kerala Poondu Thokku: இப்படி ஒரு தொக்கு இதுவரை செஞ்சிருக்க மாட்டீங்க! 

Kerala Poondu Thokku
Kerala Poondu Thokku

இதுவரை என்னதான் நீங்கள் விதவிதமான கேரளா வகை உணவுகளை சாப்பிட்டு இருந்தாலும், இந்த பதிவில் நான் சொல்லப்போவது போல கேரளா ஸ்டைல் பூண்டு தொக்கு செய்து சாப்பிட்டு பாருங்கள். இதன் சுவை உண்மையிலேயே சூப்பராக இருக்கும். கேரளாவின் இந்த பாரம்பரிய செய்முறையானது பூண்டின் காரமான சுவையை மசாலா பொருட்களுடன் ஒன்றிணைத்து, சாதம், தோசை, இட்லி, சப்பாத்தி மற்றும் பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சூப்பர் சுவையைக் கொடுக்கிறது. சரி வாருங்கள் கேரளா ஸ்டைல் பூண்டு தொக்கு எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

  • 1 கப் தோல் உரிக்கப்பட்ட பூண்டு

  • 4 சிவப்பு மிளகாய்

  • 1 ஸ்பூன் கடுகு 

  • ½ ஸ்பூன் வெந்தயம் 

  • ½ ஸ்பூன் மஞ்சள் தூள் 

  • ½ ஸ்பூன் மிளகாய்த்தூள் 

  • 2 ஸ்பூன் புளிக்கரைசல் 

  • 2 ஸ்பூன் எண்ணெய் 

  • தேவையான அளவு உப்பு

செய்முறை: 

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் வெந்தயத்தை சேர்த்து தாளிக்கவும். பின்னர் பூண்டினை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்குங்கள். பூண்டு கருகாமல் இருக்க அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்கவும். 

இதற்கிடையில் சிவப்பு மிளகாயை வெந்நீரில் சுமார் 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் சிவப்பு மிளகாயிலிருந்து தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். 

இதையும் படியுங்கள்:
3 Star Vs 5 Star: என்ன ஏசி வாங்கலாம்?.. முழு தகவல்!
Kerala Poondu Thokku

இப்போது மிளகாய் பேஸ்ட்டை வாணலியில் சேர்த்து பூண்டுடன் கலக்கும்படி கிளறிவிடுங்கள். அடுத்ததாக மஞ்சள்தூள், சிவப்பு மிளகாய்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலா பொருட்கள் அனைத்தும் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

இப்போது தீயைக் குறைத்து புளிக்கரைசல் மற்றும் லேசாக தண்ணீர் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் பூண்டு தொக்கு கெட்டியாகும் வரை வேக விட்டால், சூப்பரான சுவையில் கேரளா ஸ்டைல் பூண்டு தொக்கு தயார். இதை அப்படியே எடுத்து, சாதத்தில் சேர்த்து, கொஞ்சமாக நெய் விட்டு சாப்பிட்டால், அடடா! வேற லெவல். 

இந்த அட்டகாசமான ரெசிபியை உடனே முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com