டேஸ்டியான ரமலான் ‘நோன்பு கஞ்சி’ எப்படி செய்வது?

நோன்பு கஞ்சி...
நோன்பு கஞ்சி...youtube.com
Published on

து என்னமோ தெரியலைங்க, பள்ளிவாசலில் கொடுக்கும் நோன்பு கஞ்சி, மாரியம்மன் கோவிலில் ஊற்றப்படும் கூழ், பெருமாள் கோவிலில் கொடுக்கப்படும் புளியோதரைன்னு இந்த இடங்களில் செய்யப்படும் உணவுகளின் சுவை மட்டும் வேற லெவலில் இருக்கும். சின்ன வயதில் இங்கேயெல்லாம் சென்று வாங்கி சாப்பிட்ட அனுபவம் எத்தனை பேருக்கு இருக்கு சொல்லுங்க? அதெல்லாம் ஒருகாலம்! சரி இப்போ ரமலான் நோன்பு சீசன் வேற தொடங்கிடுச்சு. அதனால வீட்டிலேயே எப்படி நோன்பு கஞ்சி செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்;

சீரக சம்பா அரிசி- 1கப்.

சிறுபருப்பு-1/2 கப்.

நறுக்கிய கேரட்-1 கப்.

நறுக்கிய பீன்ஸ்-1 கப்.

நறுக்கிய வெங்காயம்-1கப்.

நறுக்கிய பச்சை மிளகாய்- 4.

நறுக்கிய தக்காளி- 1கப்.

இஞ்சி பூண்டு பேஸ்ட்-1தேக்கரண்டி.

பட்டை, லவங்கம், பிரியாணி இலை, ஏலக்காய்- தேவையான அளவு.

வெந்தயம்-1/2 தேக்கரண்டி.

சீரகம்-1/2 தேக்கரண்டி.

நெய்- 2 தேக்கரண்டி.

புதினா- சிறிதளவு.

எண்ணெய்-2 தேக்கரண்டி.

கொத்தமல்லி- தேவையான அளவு.

தேங்காய் பால்- 1கப்.

துருவிய தேங்காய்- சிறிதளவு.

உப்பு-தேவையான அளவு.

செய்முறை விளக்கம்;

ரு கப் சீரக சம்பா அரிசிக்கு 1/2 கப் சிறுபருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து கொண்டு அத்துடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, வெந்தயம் ½ தேக்கரண்டி, சீரகம் ½ தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம்1 கப், பச்சை மிளகாய் 4, தக்காளி 1 கப் போட்டு வதக்கி விட்டு கொஞ்சம் இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
அதிக நேர தூக்கம் ஆரோக்கிய அபாயம் என்பதை அறிவீர்களா?
நோன்பு கஞ்சி...

இப்போது நறுக்கி வைத்திருக்கும் கேரட்1 கப், பீன்ஸை 1 கப் சேர்த்து அத்துடன் சிறிது புதினா சேர்க்கவும். இப்போது தண்ணீர் 4 கப் ஊற்றி, ஊற வைத்திருக்கும் அரிசிப் பருப்பை சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அடுப்பை சிம்மில் வைத்து வேகவிடவும். அரிசி வெந்த பிறகு கடைசியாக கொத்தமல்லி தூவி, தேங்காய் பால் ஒரு கப் சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொஞ்சம் துருவிய தேங்காயை சேர்க்கவும். அவ்வளவுதான் சுவையான நோன்பு கஞ்சி தயார். வீட்டிலேயே செஞ்சி சாப்பிடுங்க சும்மா சுவை அள்ளும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com