பிரபல இத்தாலி ஸ்பெஷல் ஐயோலி (Aioli)யை வீட்டிலேயே செய்து அசத்துவது எப்படி?

Aioli recipe...
Aioli recipe...wikipedia.org

யோலி என்பது மயோனைஸ் போன்ற ஒரு சாஸ் வகையை சேர்ந்தது. இத்தாலி பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் பிரபலமான சாஸ் வகை.  வீட்டிலேயே ஐயோலி செய்யும் செய்முறை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்; 

1. பூண்டு பற்கள் - இரண்டு பெரியவை

2. முட்டை ஒன்று

3. உப்பு - கால் ஸ்பூன்

4. ஆலிவ் எண்ணெய் அல்லது தாவர எண்ணெய் - ஒரு கப்

5. சிறிய எலுமிச்சை- ஒன்று அல்லது வினிகர் ஒரு ஸ்பூன்.

6. கடுகு – அரை ஸ்பூன்

செய்முறை;

பூண்டை தோலுரித்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி கடுகு சேர்த்து, நன்றாக கலக்கவும். ஒரு ஸ்பூன் லெமன் சாறும், மசிக்கப்பட்ட பூண்டு பற்களும் சேர்க்கவும். இந்தக் கலவையை மிக நன்றாக கலக்க வேண்டியது அவசியம். வெளிர் மஞ்சள் நிறம் வரும் வரை நன்றாக அடித்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
உடல் வலு பெறவும், எடை குறையவும் உதவும் ஸ்கிப்பிங்!
Aioli recipe...

இதில் ஆலிவ் ஆயிலை மிகவும் மெதுவாக சொட்டு சொட்டாக ஊற்ற வேண்டும். அதை நன்றாக விப்பரில் அடித்துக் கொள்ள வேண்டும். அந்த கலவை நன்றாக கெட்டியானவுடன் மீண்டும் சிறிதளவு ஆலிவ் ஆயிலை ஊற்ற வேண்டும். நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். இப்போது அதில் உப்பை தூவிக் கொள்ளவும்.  

அந்தக் கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீரை சொட்டு சொட்டாக ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். இதை ஃப்ரிட்ஜில் சில மணி நேரங்கள் வைத்து பின்பு அதை வெளியே எடுத்து தகுந்த உணவுடன் பரிமாறலாம் பொறித்த உருளைக்கிழங்கு, இதற்கு மிகவும் ஏற்றது. பிரெஞ்ச் ப்ரைஸ், பொறித்த காய்கறிகள் வேக வைத்த முட்டைகள் கடல் உணவுகள், பர்கர், சேனைக்கிழங்கு பொரியல் முதலியவற்றுடன் தொட்டு சாப்பிட ஏற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com