திருநெல்வேலி ஸ்பெஷல் தாளகம் செய்வது எப்படி?

ஸ்பெஷல் தாளகம்
ஸ்பெஷல் தாளகம் www.youtube.com
Published on

இந்த தாளகத்தின் ஸ்பெஷலே எள்ளும் நல்லெண்ணெயும்தான்.

பூசணிக்காய் 1 பத்தை

பரங்கிக்காய் 1 பத்தை

சர்க்கரை வள்ளி கிழங்கு 2 வாழைக்காய் 1

அவரைக்காய் 10

சேனைக்கிழங்கு 1 துண்டு

சேப்பங்கிழங்கு 6

பச்சை பட்டாணி 1/4 கப்

மொச்சை 1/4 கப்

பீன்ஸ் 10

கேரட் 1 

உருளைக்கிழங்கு 2

புளி எலுமிச்சை அளவு 

உப்பு தேவையானது 

வறுத்து பொடிக்க:

தனியா 2 ஸ்பூன்

கடலைப்பருப்பு 1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன் 

காய்ந்த மிளகாய் 6

எள் 2 ஸ்பூன்

தேங்காய் துருவல் 1/2 கப்

பச்சரிசி 2 ஸ்பூன்

மேலே சொன்ன காய்கறிகள் அனைத்தையும் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி புளியை நீர்க்க கரைத்து விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவிடவும்.

வாணலியில் வறுக்க வேண்டிய தனியா, பருப்பு வகைகள், மிளகாய், எள் ஆகியவற்றுடன் பச்சரிசியும் சேர்த்து சிவக்க வறுத்து தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் நன்கு பொடி செய்து கொள்ளவும். காய்கள் வெந்ததும் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து ஒரு துண்டு வெல்லமும் போட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். 

இதையும் படியுங்கள்:
அவதிப்படுத்தும் குளிர்கால மார்பு சளிக்கு நிவாரணம்!
ஸ்பெஷல் தாளகம்

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, இரண்டு மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு ஒரு கொத்து கறிவேப்பிலையும் சேர்த்து கடுகு பொரிந்ததும்  தாளித்துக் கொட்ட மிகவும் ருசியான தாளகம் தயார். 

இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பூரி, சப்பாத்தி, பொங்கலுக்கு தொட்டுக் கொள்ளலாம். நல்லெண்ணெய் மணத்துடன் சத்தான பல காய்கறிகளின் கலவை தயார். செய்துதான் பாருங்களேன்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com