பாரம்பரிய டர்கீஷ் டிலைட் (Turkish Delight) இனிப்பு வீட்டிலேயே எப்படி செய்வது..?

Turkish Delight
Turkish Delightwww.tastingtable.com
Published on

நார்னியா படம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அந்த படத்தில் நார்னியா உலகத்தில் அந்த குழந்தைகள் ஒரு இனிப்பு வகையை சாப்பிடுவார்கள்.

அந்த இனிப்பை பார்த்ததும் அது உண்மையிலேயே இருக்கிறதா என்ற ஆர்வம் தோன்றியது. அப்படி தேடிப் பார்க்கையிலே கிடைத்தது தான் டர்கீஷ் டிலைட் ரெசிப்பி லோகம்.

ஆம். அந்த இனிப்பு வகை உண்மையிலேயே இருக்கிறது. டர்கீஷ் டிலைட் லோகம் ஒரு பாரம்பரிய டர்கீஷ் இனிப்பு வகையாகும். இது நூறு வருடத்திற்கு மேலாக துருக்கியில் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இனிப்பை துருக்கியில் குடும்பத்தினர் ஒன்று கூடுகையில் செய்வார்களாம். இதை டர்கீஷ் காபியுடம் சேர்த்து ஸ்னாக்ஸ் போல பரிமாறுவார்களாம். பொதுவாக ரோஜாவின் சாறைப் பயன்படுத்தியே செய்வார்கள். போகப் போக அவரவர்களுக்கு பிடித்த ஃபிளேவர்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். ஆரஞ்சு பழச்சாறு, லெமன் சாறு என்று மக்களுக்கு பிடித்த சுவைக்கு எற்ப மாற்றிக்கொண்டனர்.

இன்று டர்கீஷ் டிலைட் லோக்கம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மூன்று பெரிய ஆரஞ்சில் இருந்து எடுக்கப்பட்ட ஜூஸ்.

ஜீனி- 4 கப்.

பொடியாக நறுக்கிய ஆரஞ்சு தோல்- 1 தேக்கரண்டி.

சோளமாவு-1கப்.

பவுடர் சுகர்- தேவையான அளவு.

வெனிலா எசென்ஸ்- 1 தேக்கரண்டி.

செய்முறை:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் ஆரஞ்சு ஜூஸை ஊற்றி அதில் 4 கப் ஜீனியையும் ஒரு கப் சோளமாவையும் சேர்க்கவும். சிறிது நேரம் கிண்டி விட்டு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் ஆரஞ்சு தோலை சேர்க்கவும். வெனிலா எசென்ஸ் 1 தேக்கரண்டி சேர்க்கவும்.

இதையும் படியுங்கள்:
பெண்களின் உதட்டுக்கும் செர்ரி பழத்துக்கும் என்ன தொடர்பு?
Turkish Delight

இப்போது நன்றாக கெட்டியாகும் வரை கிண்டவும். அந்த கலவை நன்றாக அல்வா பதத்திற்கு வருவதை காண முடியும். பின்பு அதை இறக்கி ஒரு பாத்திரத்தில் சமமாக பரப்பி ஆறிய பிறகு பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும். இப்போது நன்றாக இறுகியிருக்கும். அதை சிறு சிறு துடுகளாக வெட்டி சக்கரை பவுடரில் போட்டு பிரட்டி எடுக்க வேண்டும். இப்போது சுவையான டர்கீஷ் டிலைட் இனிப்பு ரெடி. இது ஜெல்லி போன்ற இனிப்பு வகை என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com