பெண்களின் உதட்டுக்கும் செர்ரி பழத்துக்கும் என்ன தொடர்பு?

What is the relationship between women's lips and cherries?
What is the relationship between women's lips and cherries?https://tamil.webdunia.com
Published on

செர்ரி பழத்தை பெண்களின் உதட்டுக்கு இலக்கணமாகக் கூறுவது உண்டு. சிவப்பு நிறமான செர்ரி சுவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கவர்ச்சியான பழம். செர்ரி பொதுவாக கேக்கு, டார்ட்ஸ், இனிப்பு பொருட்களை அலங்கரிக்கவும் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்ட உணவிலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. சிவப்பு செர்ரிகளும் அதன் சாறும் கீல்வாதம் மற்றும் மூட்டுவலி ஆகியவற்றின் வீக்கத்தை எதிர்த்துப் போராடுகின்றன. சிவப்பு செர்ரி சாறு இரத்தத்தில் யூரிக் அமில அளவுகளை குறைக்க உதவுகிறது. செர்ரி பழம் ரோசாசியே என்னும் குடும்ப வகையை சேர்ந்தது ஆகும்.

நம் உடலின் வியர்க்காத பகுதி உதடுதான். முகக் கவர்ச்சிக்கு உதடுகள் ஒரு முக்கியக் காரணம். உதடு மட்டும் அழகாக இருந்தால் போதாது, பற்களையும் பாதுகாக்க வேண்டும். மகிழ்ச்சி, தூக்கம், சோகம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களைப் போல் உதட்டு சிரிப்புக்கும் பங்கு உண்டு. வைட்டமின் குறைபாட்டினால் உதடுகளில் புண்கள், இரத்தம் வடிதல் போன்றவை வரலாம். அதற்கு நல்ல உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

செர்ரி பழத்தின் பயன்கள்:

செர்ரி பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. 100 கிராம் எடையுள்ள செர்ரி பழத்தில் ஆயிரம் முதல் 3000 மில்லி கிராம் வரை வைட்டமின் சி நிறைந்துள்ளது. செர்ரி பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு அதிகமாக இருப்பதால் இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸ்.

இதையும் படியுங்கள்:
அளவற்ற நன்மைகள் கொண்ட சீதா பழத்தின் ஆரோக்கிய குணம் தெரியுமா?
What is the relationship between women's lips and cherries?

தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று செர்ரி பழங்களை சாப்பிட்டு வந்தால் உடம்புக்குத் தேவையான வைட்டமின் சி சத்து கிடைத்துவிடும். சிவப்புச் செர்ரிகளில் உள்ள அதிக ஆக்சிஜனேற்ற பண்புகள் சருமத்திற்கு அதிசயத்தை செய்கின்றன. செர்ரி சாறு முகப்பரு, வல்கரிஸ் மற்றும் ரொஸசியா ஆகியவற்றிற்கான மாற்று சிகிச்சையாக பரிந்துரைக்கப்படுகிறது.

பெண்களின் உதட்டிற்கும் செர்ரி பழத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதால், இயற்கை ரசாயனமாக பெண்களின் உதடுகளில் பூச இது பயன்படுத்தப்படுகிறது. இன்சோமியா எனப்படும் தூக்கக் குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் செர்ரி பழ ஜூஸ் குடிப்பதன் மூலம் அந்த நோயினை குணப்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com