தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 1
சின்ன வெங்காயம் - 200கி
தக்காளி - 2
பூண்டு பல் - 8
மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 மேசைக் கரண்டி
மல்லித்தூள் - 1 மேசைக் கரண்டி
தேங்காய் பால் - 50 மில்லி
புளி - 1 எலுமிச்சை அளவு
கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
வறுத்து அரைக்க:
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
கடைலப் பருப்பு - 1 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - தேக்கரண்டி
சீரகம் - தேக்கரண்டி
வெந்தயம் -தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் ஒரு கப் தண்ணீரில் நன்கு கரையும் அளவுக்கு புளியை கரைத்து வைக்கவும். வாழைக்காயை நீளவாக்கில் நறுக்கி சிறிது மிளகாய்த் தூள், உப்பு கலந்து எண்ணெயில் பொரித்து தனியே வைக்கவும்.
வறுக்க கொடுத்துள்ள மிளகு, சீரகம், வெந்தயம், தனியா, கடலைப் பருப்பு ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் சிவக்க வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் போட்டு தாளித்து பூண்டு, வெங்காயம், மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இப்போது மிளகாய் தூள், தனியாத்தூள் சேர்க்கவும். அதனுடன் பொடியாக்கி வைத்துள்ள தூளையும் சேர்த்து விடவும். இந்த கலவையில் இப்போது புளித் தண்ணீரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதிக்கும் போது அதில் தேங்காய் பாலையும் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும்.
நல்ல கொதி வந்ததும் குழம்பில் பொறித்த வாழைக் காய்களை சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும். இப்போது தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும். வாழைக்காய் வெந்ததும், கொத்தமல்லியை தூவி அடுப்பை நிறுத்தி விடவும்.
இப்போது சுவையான சைவ மீன் குழம்பு தயார். இதை சாதம் அல்லது இட்லி தொசையுடன் பரிமாறலாம்.