இரும்புசத்து தரும் கேழ்வரகு தோசையும், சிவப்பு அவல் புலாவும்!

Iron foods...
healthy snacksimage credit - youtube.com
Published on

ளரும் பிள்ளைகளுக்கு சத்தானதை அடிப்படையில் தந்துவிட்டால் பின் நாட்களில் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்காது. இதோ இங்கு எளிதாக செய்யக்கூடிய இரண்டு இரும்பு சத்து மிகுந்த ரெசிபிகள் உங்களுக்காக.

கேழ்வரகு தோசை:

தேவை:
தோசை மாவு - 3 கப்
கேழ்வரகு மாவு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2 பெரியது ப நறுக்கிய கேரட் பீன்ஸ் - 1 கப்
ஏதேனும் ஒரு கீரை -ஒரு கைப்பிடி அளவு (விரும்பினால்)
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய்  -3
கருவேப்பிலை கொத்தமல்லி தலை புதினா - தலா அரை கைப்பிடி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு உளுத்தம்பருப்பு  கடலைப்பருப்பு சீரகம் - தலா அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- கால் டீஸ்பூன்

செய்முறை:
சிறு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும். பச்சை மிளகாய் பொதினா கொத்தமல்லி கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து அதில் சேர்த்து வதக்கவும். கூடவே துருவிய இஞ்சியை சேர்க்கவும். வாசம் வந்ததும் பொடியாக நறுக்கிய  வெங்காயம், கேரட், பீன்ஸ், கீரை கொத்தமல்லித்தழை, கருவேப்பிலை பெருங்காயத்தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். தோசை மாவுடன் ராகி மாவை சிறிதளவு உப்பு தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கரைக்கவும். அதனுடன் வதக்கிய காய்கறி கலவை சேர்த்துக் கலந்து காய்ந்த தோசை சட்டியில் சற்று கனமான தோசைகளாக இட்டு எண்ணெய் ஊற்றி இருபுறமும் நன்கு வேகவைத்து தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறலாம்.  விருப்பப்பட்டால் மேலே மிளகு தூவிய தக்காளி வெங்காயம் சேர்க்கலாம்.  

இது வித்தியாசமான ருசியோடு இரும்பு சத்தும் கொண்டது. இதை காலை நேர உணவாக எடுக்கும்போது அன்றைய நாள் முழுவதும் சோர்வு அடையாமல் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

சிவப்பு அவல் பிரியாணி:

தேவை:
கெட்டி சிவப்பு அவல் - ஒரு கப்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்   பட்டை கிராம்பு ஏலக்காய் - தலா 2 பெரிய வெங்காயம்  - 1
தக்காளி -1
கொத்தமல்லி தழை ,புதினா- தலா ஒரு கைப்பிடி
எலுமிச்சம்பழச்சாறு - அரை மூடி
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் - தலா அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் -இரண்டு 
வறுத்துப் பொடித்த வேர்க்கடலை - கேரட், பீன்ஸ் - நறுக்கியது அரைக்கப்
எண்ணெய் -  3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

இதையும் படியுங்கள்:
இரவு தூங்கும் முன் நடப்பதால் கிடைக்கும் 4 நன்மைகள்!
Iron foods...

செய்முறை:
அவலை கழுவி சுத்தம் செய்து சிறிது உப்பு, எலுமிச்சைசாறு சேர்த்து வைக்கவும். ஓரு அடிகனமான வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும்  பட்டை கிராம்பு, ஏலக்காய் தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அத்துடன் காய்கறிகள் கொத்தமல்லி தலை புதினா மிளகாய்தூள் மஞ்சள் தூள், மஞ்சள் தூள்  உப்பு சேர்த்து வதக்கவும் பிறகு சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேகவிடவும். மிதமான தீயில் அவ்வப்போது கிளறி நன்கு வெந்ததும்  வேர்க்கடலைத்தூள் தூவி இறக்கி சூடாக பரிமாறலாம். சிவப்பு அவலிலும் இரும்புச்சத்து கனிமச் சத்துகள் இருப்பதால் ஆரோக்கியம் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com