
ரயில் பயணிகளை கவருவதற்காக இந்திய ரயில்வே பல வித்தியாசமான உணவு வகைகளை ரயில் நிலையங்களில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் பிரபலமான 12 ரயில் நிலையங்களில் விற்கப்படும் சிறந்த உணவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
கொல்கத்தாவின் சிக்கன் கட்லெட்
ஹவுரா ரயில் நிலையத்தில் சிக்கன் கட்லெட்டுக்கு பச்சை மற்றும் கருப்பு நிற சட்னி பரிமாறப்படுவது கொல்கத்தா மக்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பிடித்தமான உணவாக உள்ளது .
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன்
சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் பரிமாறப்படும் ரவா தோசை, இரண்டு வகையான சட்னி மற்றும் காய்கறி குருமாவும் சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும்.
ரத்லம்
ரத்லம் ரயில்வே ஸ்டேஷனில் பரிமாறப்படும் மொறுமொறு ஜூசி ஜிலேபியும், போஹாவும் பிரபலமான உணவாக இருப்பதோடு இது இல்லாமல் ரத்லம் பயணம் முழுமை அடையாது.
ஜலந்தர் மற்றும் அமிர்தசரஸ்
ஜலந்தர் மற்றும் அமிர்தசரஸ் ரயில் நிலையங்களில் ஊறுகாய் மற்றும் வினிகர் வெங்காயத்துடன் பரிமாறப்படும் சோலோ பாதுரேவு மிகவும் பெயர் பெற்றது.
கர்ஜாத் நிலையம்
மும்பைக்கும் புனேவுக்கும் நடுவில் அமைந்துள்ள கர்ஜாத் ரயில் நிலையம் வடபாவ் மற்றும் படாட்டா வடபாவுக்கு பெயர் பெற்றது. பெரும்பாலான மக்கள் காலை சிற்றுண்டி சாப்பிட இந்த ரயில்வே நிலையத்திற்கு வருகிறார்கள்.
பாட்னா ரயில் நிலையம்
பீகார் பாட்னா ரயில் நிலையத்தில் உள்ளேயும், வெளியேயும் சமைக்கும் பிரபலமான உணவான லிட்டி சோகாவில் ஒரு ருசியான நெய் தடவப்பட்டு பரிமாறப்படுகிறது. பயணிகள் அதிகம் விரும்பும் உணவாக இது உள்ளது.
பாலக்காடு ரயில்வே நிலையம்
பாலக்காடு ரயில் நிலையத்தில் பிரபலமான உணவான பழம் பொரி, க்ரீமி தேங்காய் சட்னியுடன் பரிமாறப் படுகிறது. மக்கள் அதை வடிகட்டி காப்பியுடன் சேர்ந்து சுவைத்து ரசிக்கிறார்கள்.
குஜராத் சுரேந்திர நகர் ரயில்வே நிலையம்
குஜராத் சுரேந்திர நகர் ரயில்வே நிலைய, பிரபலமான உணவான ஒட்டக பாலை கொண்டு செய்யும் தேநீரை, பிஸ்கட்டுகளுடன் சிறிய மண் குவளைகளில் விற்கிறாரகள்.
அஜ்மீர் ரயில்வே சந்திப்பு
அஜ்மீர் சந்திப்பில் கதி மற்றும் கச்சோரியின் சுவையான கலவை உள்ளூர் மக்களையும், சுற்றுலா பயணிகளையும் அதிகமாக கவருகிறது .
அமிர்தசரஸ்
அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் பிரபலமான முக்கிய உணவு லஸ்ஸி. க்ரீமியான லஸ்ஸியின் மேல் மலாய் மற்றும் பாதாம் பருப்புகள் சேர்த்து விற்கப்படுகிறது.
பரேலி ரயில்வே நிலையம்
பரேலி ரயில்வே நிலையத்தில் உள்ள பிரபலமான உணவான மூங் தால் பக்கோடா, பச்சை சட்னியுடன் பரிமாறப்படுவதால் பக்கோடா பிரியர்களுக்கு சாப்பிட ஒரு சிறந்த இடம் ஆகும்.
கரக்பூர் நிலையம்
கரக்பூர் நிலையம் ஆலு டோமிற்கு பிரபலமானது. அதில் ஸ்டஃப்டு ஆலு பூரி அல்லது பிளைன் பூரி மற்றும் கூடுதல் மசாலா கிரேவியுடன் கொடுப்பதால் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது.
மேற்கண்ட 12 இடங்களுக்கும் சென்றால் அதன் பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழுங்கள்.