நீங்கள் மிளகாய் பொடிக்கு வறுக்கும்போது சக்தி நிறைந்த ஃப்ளாக்ஸ் விதைகளையும் வறுத்து சேர்த்து அரைக்கலாம்
எந்த துவையல் அரைப்பதாக இருந்தாலும் அதை முதலில் நீர்விடாமல் அரைத்து பொடித்து பிறகு நீர்விட்டு அரைக்க நீர்த்துப் போகாது. கெட்டியாக இருக்கும். சட்டினி வகைகளையும் இப்படிச் செய்யலாம்.
ரவை உப்புமா கிளறும்போது கொதிக்கும் நீரில் புளித்த மோர் சேர்க்க சுவையாக இருக்கும்.
மோர்க்களி தயாரிக்க வெது வெதுப்பான நீரில் அரிசிமாவை சேர்த்து பிறகு கெட்டியான புளித்த மோரை சேர்த்துக் கலந்து தயாரிக்க வாணலியில் ஒட்டாமல் வரும்.
அதிரசம் செய்ய பாகில் மாவை அப்படியே சேர்த்தால் பாகு அதிகமானால் அதிரசம் தயாரிப்பது கஷ்டம். எனவே ஒரு பாத்திரத்தில் மாவை எடுத்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக பாகு சேர்த்தால் அளவு அதிகமானால் பாகை வேறு பல கார்த்திக்கு உபயௌகிக்கலாம்.
பொட்டுக்கடலை உருண்டையில் பால் பௌடர் சேர்த்து பிடிக்க ருசி கூடும்.
பூசணி கூட்டு மற்றும் பாகற்காய் பிட்லை இவற்றிற்கு சுவை அதிகரிக்க ஒரு கைப்பிடி உளுந்து, ஒரு கைப்பிடி கடலை பருப்பை ஊறவைத்து மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் பொறித்து சேர்க்க அவை மிகச் சுவையாக இருக்கும்.
வேகவைத்த சேப்பங்கிழக்கை மெலிதாக நீளவாக்கில் அரிந்து உப்பு பெருங்காயம் காரம் விசிறி எண்ணையில் மொறு மொறு வென்று வறுக்க மிக ருசியாக இருக்கும்.
சௌசௌவின் மேல் தோல் வழுவழுப்பாக இருந்தால் அதை தூக்கி எறியாமல் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் வறுத்து தோலை நன்கு வதக்கி சிறிது புளி சேர்தது துவயலாக அரைக்க ருசியாக இருக்கும்.
அரிசி உப்புமாவை வெண்கலப் பானையில் கிளறினால் அதன் ருசியே அபாரம். பரண்மேல் இருக்கும் வெங்கலப் பானையை உபயோகியுங்க.