
ஸ்ட்ரீட் ஸ்டைல் சட்னி - சீஸ் சாண்ட்விச் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.புதினா இலைகள் 1 கைப்பிடி அளவு
2.கொத்த மல்லி இலைகள் 1 கைப்பிடி அளவு
3.துருவிய இஞ்சி - இரண்டு டீஸ்பூன்
4.நறுக்கிய பச்சை மிளகாய் 3
5.உரித்த பூண்டுப் பல் 6
6.லெமன் ஜூஸ் 2 டீஸ்பூன்
7.சாட் மசாலா 1 டீஸ்பூன்
8.உப்பு தேவையான அளவு
9.தேங்காய் துருவல் ½ கப்
10.உடைத்த கடலை ¼ கப்
11.சீரகத் தூள் ½ டீஸ்பூன்
12.ஒயிட் பிரட் 4 ஸ்லைஸ்
13.பட்டர் 6 டீஸ்பூன்
14.துருவிய மொஸரெல்லா சீஸ் 4 டீஸ்பூன்
செய்முறை:
புதினா இலைகள், மல்லி இலைகள், இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டுப் பல், தேங்காய் துருவல், உடைத்த கடலை, சீரகத்தூள், சாட் மசாலா, உப்பு ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு தண்ணீர்விட்டு கெட்டி சட்னி பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
அதில் லெமன் ஜூஸ் சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஒரு ஸ்லைஸ் பிரட்டின் ஒரு பக்கம் பட்டர் தடவவும். அதன் மீது சட்னியை ஸ்பூனில் எடுத்து, பிரட் முழுக்க திக்கா தடவவும். பிறகு சட்னி மறையும் அளவுக்கு மொஸரெல்லா சீஸை அதன் மீது தூவவும்.
பின் இன்னொரு பிரட் ஸ்லைசில் ஒரு பக்கம் பட்டர் எடுத்து தடவவும். பட்டர் மீது சட்னியும் தடவவும். சட்னி தடவின பின், சட்னி மற்றொரு ஸ்லைஸ்ஸிலுள்ள சீஸ் மீது படுமாறு கவிழ்த்து மூடவும். இரண்டு ஸ்லைஸ்களையும் விரல்களால் பிடித்து, பிரிந்து விடாமல் லேசா அழுத்திவிடவும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், பட்டர் தடவி அதன் மீது பிரட்டை வைத்து மிதமான தீயில் ரோஸ்ட் பண்ணவும். மேல் பக்கம் உள்ள ஸ்லைஸ் மீதும் கொஞ்சம் பட்டர் தடவி, திருப்பிப் போட்டு பொன்னிறம் வரும் வரை ரோஸ்ட் பண்ணி எடுத்துவிடவும். சுவையான ஸ்ட்ரீட் ஸ்டைல் சட்னி-சீஸ் சாண்ட்விச் ரெடி. இதேபோல் இன்னொரு செட் சாண்ட்விச்சும் தயாரித்துக்கொள்ளவும்.
புதினா - லெமன் ஜூஸ் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.ஃபிரஷ்ஷான புதினா இலைகள் 1 கப்
2.எலுமிச்சம் பழம் 2
3.தண்ணீர் 2 டம்ளர்
4.சர்க்கரை 1 டேபிள் ஸ்பூன்
5.ஐஸ் க்யூப்ஸ் 4 துண்டுகள்
செய்முறை:
புதினா இலைகளை நன்கு கழுவி உலரவைத்து எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சம் பழத்தை வெட்டி ஜூஸ் பிழிந்து கொள்ளவும். மிக்ஸியில் புதினா இலைகள், சர்க்கரை, எலுமிச்சம் ஜூஸ் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். பின் மீதமுள்ள தண்ணீரையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு கலந்து, இரண்டு டம்ளர்களில் ஊற்றவும்.
ஐஸ் க்யூப் துண்டுகளை இரண்டு டம்ளர்களிலும் இரண்டு இரண்டு போட்டு குடிக்கவும். புத்துணர்ச்சியூட்டும் ஆரோக்கியமான புதினா-லெமன் ஜூஸ்!!