
இந்திய உணவு மிகச்சிறந்த உணவு என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்க முடியாது. அதுவும் தென்னிந்திய உணவுகளான இட்லி, தோசை அடடா என சொல்ல வைக்கும். இட்லி சாம்பார் காம்பினேஷன் சூப்பர் என சொல்ல வைக்கும். தோசை மிளகாய்ப்பொடி நாக்கில் எச்சில் ஊறவைக்கும்.
இப்படியான உணவுகளோடு டோக்ளா, பாகலா மற்றும் கொம்புச்சா உணவு வகைகள் மிக சிறப்பானவை ஆகும்.
வீட்டிலேயே மிக எளிமையாக அனைவராலும் செய்யக்கூடிய இட்லி, தோசை உணவு பண்டங்கள் எளிதாக ஜீரணம் ஆக கூடிய ஒன்றாகவும் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வகையில் உள்ளதாலும் இன்றுவரை ஏன் நாளை கூட விரும்பி சாப்பிடுகிறோம்.
இந்த உணவுகள் நாக்கின் சுவைக்காக மட்டுமல்லாது அதில் உள்ள நல்ல பாக்டீரியா நமது உடலின் ஆரோக்கியத்திற்கும் எதிர்ப்பு சக்திக்கும் உதவுவதோடு ஜீரண மண்டலத்திற்கு எளிதாக உள்ளது.
நமது முன்னோர்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு வகைகளை உண்டு வாழ நம்மை பழக்கப்படுத்தி உள்ளார்கள்.
அப்படியான உணவுகளில் சில இதோ கஞ்சி உணவு.
இந்த உணவு வட இந்தியாவில் குளிர்காலங்களில் நமது உடலுக்கு இதமாக இருக்கும் வகையில் இதை தயாரிக்கிறார்கள். இந்த கஞ்சி உணவு கேரட் கடுகு மற்றும் சில மசாலா வகைகளை சேர்த்து தயாரித்து பருகுகிறார்கள். இந்த கஞ்சி உணவு ஹோலி பண்டிகையின் அதிக அளவு தயாரித்து பருகி வருகிறார்கள். இது எளிதில் ஜீரணம் ஆகும் வகையில். உடலுக்கு நல்ல ஆரோக்கியம் அளிக்கும் வகையில் உள்ளது.
இட்லி மற்றும் தோசை
தென்னிந்திய பிரபல உணவான இட்லியும் தோசையும் மிக மிக உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவாக உள்ளது. எளிதில் ஜீரணமாகி உடலில் சத்தாக உருமாற்றம் அடைகிறது. எனவே அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
டோக்ளா (குஜராத்)
குஜராத் மக்களின் பிரதான உணவான இது இட்லி போன்றதே ஆகும். கடலைமாவு கொண்டு தயாரிக்கப்படும் இந்த வகை உணவு காலை உணவாகவும், தேநீர் நேரத்தில் சிற்றுண்டியாகவும் பல வகையில் பயனளிக்கத்தக்க உணவாக குஜராத் மக்களுக்கு பரிணமளிக்கிறது. டோக்ளாவின் மேல் தூவலாக கடுகு பச்சை மிளகாய் கொத்துமல்லி தழை ஆகியவை அழகூட்டி நம்மை சாப்பிட உணர்ச்சி ஊட்டுகிறது.
பாகலா (ஒடிசா)
எளிமையான உணவான இது ஒடிசா மக்களின் பிரதான உணவாக உள்ளது. குறிப்பாக கோடைக்காலங்களில் வடித்த அரிசி சாதத்தை இரவு முழுவதும் தண்ணீரில் வைத்து மறுநாள் சாப்பிட உடல் குளிர்ச்சியாகும். இதில் தயிர். வறுத்த காய்கறிகள் மற்றும் எலுமிச்சைசாறு இவைகளை சேர்த்தும் சாப்பிடுகிறார்கள். இவை கோடை வெப்பத்தை குறைப்பதோடு உடல் குளிர்ச்சியாக இருக்க வைக்கிறது. அட இது நம்மூர் ”பழைய சோறுதானே!”
கொம்புச்சா (வடகிழக்கு இந்தியா)
இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளான மணிப்பூர் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இவ்வகையான உணவு பிரசித்தமானது. கொம்புச்சா மற்றொரு பெயரான கேமன் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் இனிப்பான தேநீர் என விரும்பி அருந்துகிறார்கள். இதில் நல்ல பாக்டிரீயாக்களும் ஈஸ்ட் டும் அடங்கி உள்ளதாம்.
இந்த வகை பானம் பேக் செய்யப்பட்டு உலகத்தில் பல்வேறு நாடுகளுக்கும் செல்கிறதாம். இது ஜீரணத்திற்கும் உடல் எதிர்ப்பு சக்திக்கும் உகந்தவையாக உள்ளது.
ஆம்பாள் (கொங்கன்)
இந்தியாவின் கொங்கன பகுதிகளில் இந்த வகை உணவு தயாரிக்கப்படுகிறது. இந்த உணவு வகை மாம்பழத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதுவும். கோடைக்காலத்தில் மாம்பழ சீசன் அல்லவா அதை நன்கு பயன்படுத்தி கொள்கிறார்கள்.
மாம்பழத்தை நன்கு மசித்து அதனுடன் சில மசாலா வகைகள். சிகப்பு மிளகாய் பவுடர். கடுகு. வெந்தய தூள் ஆகியவற்றை சேர்த்து சில நாட்கள் ஊறவைக்கிறார்கள். பின்பு பிடித்தமான சுவை ஊட்டிகளைச் சேர்த்து அருந்துகிறார்கள். இவை அரிசி உணவு மற்றும் ரொட்டி ஆகியவற்றிற்கு துணையாக பரிமாறுகிறார்கள். இவ்வளவு எளிமையான ஆரோக்கியமான உணவு வகைகளை நீங்களும் சமைத்து சாப்பிடலாம்தானே!