சூப்பர் சுவையில் மீல்மேக்கர் கொத்துக்கறி செய்யலாம் வாங்க!

மீல்மேக்கர் கொத்துக்கறி
மீல்மேக்கர் கொத்துக்கறிwww.youtube.com
Published on

திய நேரம் உணவுக்கு கொஞ்சம் காரசாரமாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள் சிலர். ஆனால் அதே பொரியல் அதே காய்கறி என்று சலிப்பாகவும் இருக்கும். அந்த நேரத்தில் மரக்கறி என்று சொல்லப்படும் இந்த மீல்மேக்கர் கொத்துக்கறி ரெசிபியை செய்து பாருங்கள். நிச்சயம் பாராட்டு கிடைக்கும்.

தேவை:
மீல் மேக்கர் எனப்படும் சோயா உருண்டைகள் பெரியது-  ஒரு கப்
பெரிய வெங்காயம் -2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு  - 6 பல்
பெரிய தக்காளி - ஒன்று
பட்டை, கிராம்பு -தலா 3
சோம்பு- சிறிது
உப்பு - தேவைக்கு
மிளகாய் தூள் -ஒரு ஸ்பூன்
கரம் மசாலா -அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்,
எண்ணெய் - 1 டே. ஸ்பூன்

செய்முறை:
சோயா உருண்டைகளை சுடுநீரில் போட்டு இரண்டு மூன்று முறைகள் நன்கு பிழிந்து எடுத்து மிக்ஸியில் இட்டு ஒரு சுழற்று (நைசாக கூடாது திப்பி திப்பியாக இருக்க வேண்டும் கொத்துக்கறி போன்று) சுழற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கனமான வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பட்டை, சோம்பு , கிராம்பு போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய  இஞ்சி பூண்டு சேர்த்து வாசம் வரும் வரை வதக்கி பின் சிறியதாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாகும் வரை வதக்கி அதில் நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி அடித்து வைத்துள்ள மீல் மேக்கரை அதில் சேர்த்து நன்கு கொத்தி விட்டுக் கிளறி மேலே கருவேப்பிலை கொத்தமல்லி தூவி  இறக்கலாம்.

இதையும் படியுங்கள்:
செல்பி மோகமும் அதனால் ஏற்படும் ஆபத்தும்!
மீல்மேக்கர் கொத்துக்கறி

இது தயிர், ரசம் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். தேங்காய்த் துருவல் தேவையெனில் சேர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com