வேர் காய்கறிகளை தவிர்க்காமல் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

vegetables...
vegetables...
Published on

நிலத்துக்கு அடியில் விளையும் வேர்க்காய்கறிகளில் அதிக அளவு மினரல்களும் ஊட்டச்சத்தும் நிறைந்துள்ளன. பொதுவாக அன்றாட உணவில் உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு போன்ற ஒரு சில வேர்க்காய் கறிகளை மட்டுமே சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் மற்ற வேர்க்காய்கறிகளில் அதிக சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆணிவேராக செயல்படும் அவைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

பீட்ரூட் ரத்தசோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த உணவு இதில் பீட்டா கரோட்டின் என்னும் ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது.

ர்னிப்  சாலட்டில் சேர்க்கக்கூடிய ஒரு காய்கறி இதயத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய டர்னிப்பில் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்  அதிக அளவில் அடங்கியுள்ளது.

ருளைக்கிழங்கில் ஸ்டார்ச் நிறைய உள்ளது இவை உடலுக்கு அதிகப்படியான ஆற்றலையும் கொடுக்கக்கூடியவை உடல் எடையை குறைக்க நினைத்தால் இதை சேர்க்கக்கூடாது.

பூண்டில் அல்லி சீன் என்னும் தாது பொருள் நிறைந்துள்ளது எனவே இதனை உணவில் அதிகம் சேர்த்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் பூண்டை பச்சையாக சாப்பிட்டால் சளி இருமல் குணமாகும்.

ஞ்சியில் நிறைய செரிமான நொதிகள் நிறைந்திருப்பதால் அவை அசிடிட்டி பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக இருமல் சளி மற்றும் தொண்டையில் தொற்று உள்ளவர்களுக்கு இஞ்சி நல்ல நிவாரணத்தை கொடுக்கும்.

கேரட்டில் உள்ள அதிகமான விட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் நல்லது. தினமும் சாப்பிட்டால் சருமம் தெளிவாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
நிதியை கையாளும் வழிமுறைகள்!
vegetables...

முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறப்பான உணவு. ஏனென்றால் இதில் கிளைசெமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்ளது. பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.

சேனைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

ர்க்கரைவள்ளி கிழங்கில் உடலுக்கு வேண்டிய ஆற்றல் அதிகம் இருக்கிறது. உருளைக்கிழங்கை விட இதில் ஸ்டார்ச் குறைவு வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால் இன்சுலின் சுரப்பை சீராக வைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com