

இந்திய உணவு வகை உலகில் பல்வேறு நாடுகளை ஆக்கிரமித்து வருகின்றன. இது அமேரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. மசாலா பொருட்கள் நிறைந்த தனித்துவமான இந்திய உணவு வகைகள் பல அமேரிக்கர்களின் இதயங்களையும், நாக்கின் சுவை மொட்டுக்களையும் கவர்ந்துள்ளன. பல்வேறு வகையான அமைப்பு, நறுமணம் மற்றும் சுவையுடன் சைவ உணவு விரும்புவோருக்கும், அசைவ உணவு பிரியர்களுக்கும் இந்திய உணவு ஏதாவது ஒன்றை வழங்குகின்றன. அந்த வகையில் அமேரிக்கா முழுவதும் மிகவும் பிரபலமான 5 இந்திய உணவுகளை பற்றி பார்ப்போம்.
1. சிக்கன் டிக்கா மசாலா
அமேரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இந்திய முகமாக கருதப்படும் சிக்கன் டிக்கா மசாலா என்பது லேசான மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்ட திடமான குழம்புடன் கூடிய கோழிக்கறி உணவாகும். இதில் சீரகம், கொத்தமல்லி, கரமசாலா போன்ற மசாலா பொருட்களுடன் தக்காளி சேர்க்கப்பட்டு சமைக்கப்பட்ட கோழிகறி துண்டுகளை கொண்டுள்ளது.
இதன் செழிமையான சுவை மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய மசாலா பொருட்களினால் அமேரிக்கர்களிடையே இது மிகவும் பிடித்த உணவாக இருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் நான் அல்லது சாதத்துடன் சேர்த்து சப்பிடுகிறார்கள்.
2. சமோசா
மசாலாக்களுடன் கூடிய உருளைக்கிழங்கு, பட்டாணி, இறைச்சியால் நிரப்பப்பட்டு எண்ணெய்யில் ஆழமாக பொரித்து எடுக்கப்படும் முக்கோண வடிவத்திலான சமோசாக்கள் அமேரிக்காவில் விரும்பப்படும் ஒரு ஸ்நாக்ஸ் வகையாகும். சமோசக்களின் மொறுமொறுப்பான வெளிப்பகுதியும், சுவையான Fillings இவற்றை பிரபலமான பசியைத் தூண்டும் தெரு உணவாக மாற்றுகிறது. சமோசாக்கள் பொதுவாக புளிப்பான புதினா சட்னியுடன் பரிமாறப்படுகிறது. இது இனிப்பான மற்றும் காரமான சுவையை அளிக்கிறது.
3. மசாலா தோசை
தென்னிந்தியாவின் பிரதான உணவுகளில் ஒன்றான மசாலா தோசை புளித்த அரிசி மாவு அல்லது பருப்பு மாவில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு மொறு மொறுப்பான மெல்லிய உணவு. இதன் உள்ளே உருளைக்கிழங்கு மசாலா வைக்கப்பட்டு தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறப்படுகிறது. அமேரிக்காவில் இது பிரபலமடைந்ததற்கு காரணம் இதன் சுவையும், பார்வைக்கு நிறைவாக இருக்கும் இதன் கவர்ச்சியும் காரணமாக இருக்கலாம்.
4. சன்னா மசாலா
சன்னா மசாலா என்பது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் அமேரிக்கர்களிடையே பிரபலமடைந்திருக்கும் சைவ உணவாகும். தக்காளி, சீரகம், கொத்தமல்லி, மஞ்சள், கரம் மசாலா என்று காரமாக தயாரிக்கப்படும் குழம்பில் கொண்டைக்கடலை சேர்த்து தயாரிக்கப்படும் சென்னா மசாலாவில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. பெரும்பாலும் சாதம் மற்றும் நானுடன் சேர்த்து சாப்பிடப்படுகிறது. இது நிறைவான மற்றும் விருப்பமான உணவாக அமைகிறது.
5. தந்தூரி சிக்கன்
தந்தூரி சிக்கன் அமேரிக்கர்களால் விரும்பப்படும் ஆரோக்கியமான மற்றும் சுவையான இந்திய உணவாகும். தயிர், எழுமிச்சை சாறு, மஞ்சள், மிளகாய் மசாலா போன்ற மசாலா பொருட்களில் கோழியை நன்கு ஊறவைத்து அடுப்பில் வாட்டியெடுக்கப்படுகிறது. அடுப்பின் வெப்பம் மற்றும் புகை தந்தூரி சிக்கனுக்கு அதன் சுவையை தருகிறது. இது பெரும்பாலும் நான் மற்றும் சாலாட்டுடன் சேர்த்து சாப்பிடப்படுகிறது.