இந்தியா மிகவும் பழமையான நாகரீகங்களில் ஒன்றாகும். அதன் பன்முகத்தன்மை மிகுந்த கலாச்சாரம், பாரம்பரியம், உணவு பழக்கங்களிலும் பிரதிபலிக்கின்றன. இந்திய உணவு அதன் மணம், சுவை காரணமாக உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இருப்பினும், சில இந்திய உணவுகள் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. அப்படி தடை செய்யப்பட்ட சில உணவுகள் என்னென்ன என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட இந்திய உணவுகள்:
வெற்றிலை பாக்கு: வெற்றிலை பாக்கு இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. இது சமூக நிகழ்வுகள், விழாக்களில் ஒரு முக்கிய உணவாக பார்க்கப்படும். இருப்பினும், வெற்றிலை பாக்கில் உள்ள நிக்கோட்டின் மற்றும் பிற வேதிப்பொருட்கள், ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற பல நாடுகளில் இது தடை செய்யப்பட்டுள்ளது.
கிண்டர் ஜாய்: குழந்தைகளுக்கு பிடித்த ஒரு சாக்லேட்தான் கிண்டல்ஜாய். ஆனால், இதில் உள்ள சிறிய பொம்மைகளளை குழந்தைகள் தவறுதலாக விழுங்கிவிடும் அபாயம் இருப்பதால், அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது.
கத்திரிக்காய் சாம்பார்: சாம்பார் இந்தியாவின் பிரபலமான ஒரு குழம்பு வகையாகும். ஆனால், சில ஐரோப்பிய நாடுகளில் கத்திரிக்காய் பயன்பாடு குறித்து கட்டுப்பாடுகள் இருப்பதால், கத்திரிக்காய் சேர்த்த சாம்பார் தடை செய்யப்பட்டுள்ளது.
சிவப்பு வண்ணம் சேர்க்கப்பட்ட உணவுகள்: பல இந்திய உணவுகளின் சிவப்பு நிறத்திற்கு சிவப்பு உணவு வண்ணம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த வண்ணம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால், ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
வெல்லம்: வெல்லம் இந்தியாவின் பாரம்பரிய இனிப்பாகும். ஆனால், அதில் உள்ள மாசுபாடு மற்றும் குறைபாடு காரணமாக அமெரிக்காவில் கட்டுப்பாடு இல்லாமல் வெல்லம் இறக்குமதி செய்வதில் தடை உள்ளது.
ஏன் இந்த உணவுகள் தடை செய்யப்படுகின்றன?
பல நாடுகளில் கடுமையான உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகளை பூர்த்தி செய்யாத உணவுகள் தடை செய்யப்படுகின்றன. சில உணவுகளில் உள்ள வேதிப்பொருட்கள் கலப்படங்கள் மற்றும் அதிகப்படியான கொழுப்பு, சர்க்கரை ஆகியவை ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால், தடை செய்யப்படுகின்றன.
மேலும், இந்தியர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத சில உணவுப் பொருட்கள் வெளிநாட்டவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அத்தகைய உணவுகளும் தடை செய்யப்படும். அதேபோல, சில நாடுகளில் மதம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த காரணங்களால் உணவுகளுக்கு தடை விதிக்கப்படலாம். மேலும், உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதுகாத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சில குறிப்பிட்ட உணவுகள் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கமே தடை விதித்துவிடும்.