விரதம் மற்றும் உடற்பயிற்சிக்குப் பிறகு ஜவ்வரிசி உணவு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

ஜவ்வரிசி
ஜவ்வரிசி
Published on

விரதத்திற்குப் பிறகும், உடற்பயிற்சிக்கு பிறகும் சாப்பிடுவதற்கு ஜவ்வரிசி சிறந்த உணவாகும். ஏனெனில், இது உடலை அதிக ஆற்றலுடன் வைத்திருக்கிறது மற்றும் உடல் சோர்வு, தலைச்சுற்றல், தலைவலி ஆகியவற்றைத் தடுக்கிறது.

அல்சர் குணமாக: ஜீரண உறுப்புகளான உணவுக் குழாய், வயிறு, குடல் ஆகியவற்றில் ஏற்படும் அல்சர் புண்களை ஆற்றுவதில் ஜவ்வரிசி மிக சிறப்பாக செயல்படுகிறது. ஜவ்வரிசி உணவுகள் செரிமானம் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் சுலபமாக கடந்து செல்ல குடற்சுவற்றில் வழுவழுப்புத் தன்மையை உண்டாக்குகிறது.

ஊட்டச்சத்து உணவு: ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் சத்துகள் அதிகமுள்ளதால் இழந்த சத்துக்களை விரைவில் ஈடு செய்து, தசைகளுக்கு வலிமையைத் தருகிறது. உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.

இரத்த சோகை நீங்க: நமது இரத்தத்தில் சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தி குறையும்போது ஏற்படும் இரத்த சோகைக்கு மருந்தாக ஜவ்வரிசி நமது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்த உணவாக இருக்கிறது.

பற்கள் வலுவடைய: உணவை நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலமே உணவுப்பொருட்கள் வேகமாக செரிமானம் ஆகின்றன. ஜவ்வரிசியில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால்  எலும்பு மற்றும் பற்களில் அதிக அளவில் சேர்ந்து அவை இரண்டையும் பலப்படுத்துகிறது. பற்களின் எனாமல் சீக்கிரத்தில் தேய்ந்து போகாமல் தடுக்கிறது.

உறுதியான எலும்புகளுக்கு: மனிதர்களின் எலும்புகளுக்குள்ளாக காரைகள் வலுப்பெற்றிருக்கும் போது மனித எலும்புகள் சுலபத்தில் உடைவதில்லை. ஜவ்வரிசியில் கால்சியம் சத்து அதிகமிருப்பதால்  எலும்புகளுக்குள்ளாக இருக்கும் காரைகளை வலுப்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு தேய்மானம் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

இதயம் சீராக இயங்க: நமது இதயம் நன்றாக இயங்கவும், நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கவும் அன்றாடம் அதிக கொழுப்புச் சத்து இல்லாத உணவுகளை சாப்பிட வேண்டும். ஜவ்வரிசி உணவுகள் இரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்கள் மற்றும் இதயத் தசைகளின் இயக்கம் சீராக்கப்பட்டு, இருதய பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.

இதையும் படியுங்கள்:
வன மனிதர்களான ஒராங்குட்டான்களை பாதுகாப்பதன் அவசியம் தெரியுமா?
ஜவ்வரிசி

நீரிழிவு நோய் கட்டுப்பட: ஜவ்வரிசியில் நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரிசமமாக வைத்துக்கொள்ளும் கார்போஹைட்ரேட் சத்துகள் அதிகம் இருப்பதால், இதை அடிக்கடி சாப்பிடும் நீரிழிவு நோயாளிகளுக்கு தங்களின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியான விகிதத்தில் காக்கப்படுகிறது.

இரத்த அழுத்த பிரச்னை தீர: ஜவ்வரிசியில் உள்ள பொட்டாசியம் சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தங்களை தளர்த்தி, அதிக இரத்த அழுத்தத்தை வெகுவிரைவில் சமமான அளவிற்கு கொண்டு வருகிறது. இந்த இரத்த அழுத்தத்தால் இதயத் தசைகளில் ஏற்படும் மிகுதியான அழுத்தத்தையும் குறைக்கிறது.

இவ்வளவு நன்மைகள் நிறைந்த ஜவ்வரிசி உணவுகளை விரதத்திற்கு பிறகும் உடற்பயிற்சிக்கு பின்பும் சாப்பிட்டு வலிமையான, ஆரோக்கியமான உடலைப் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com