indian street foods!
idly, kuzhipaniyaram...Image credit - myfoodstory.com

இந்தியாவின் தெருவோர உணவு வகைகள்!

Published on

தெருவோரங்களில் தள்ளுவண்டிகளில் தயாரித்து விற்கப்படும் பொதுவான உணவு வகைகள் ஆரோக்கியமற்றது என்ற பொதுவான நம்பிக்கை இருந்த போதிலும் பல சாலையோர உணவுகள் பிரபலமாக இருக்கிறது. அவை என்னென்ன உணவு வகைகள் என்பதை அறிவோம்.

1. இட்லி, சாம்பார்: தென்னிந்தியாவில் இது பொதுவான உணவு ஆகும். உளுந்து, அரிசி ஆகியவற்றை கொண்ட புளித்த மாவை ஆவியில் வேக வைப்பதன் மூலம் இட்லி தயாரிக்கப்படுகிறது. தென்னிந்திய மற்றும் இலங்கை தமிழ் உணவு வகைகளில் சாம்பார் பிரபலமானது. புளியை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் ஒரு குழம்பு இதனுடன் முதன்மையாக பருப்பு, காய்கறி சேர்க்கப் படுகிறது. கூடவே தேங்காய் சட்னியும் பரிமாறப்படுகிறது.

2. தோசை: புளித்த மாவிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை அப்பம். இது மொருகலாகவே இருக்கும். இந்திய துணை கண்டம் முழுவதும் பிரபலமானது. மசாலா தோசை, உருளைக்கிழங்கு மசாலா அல்லது பன்னீர் மசாலா மற்றும் சட்னியுடன் சூடாக பரிமாறப்படுகிறது.

3. ஊத்தப்பம்: தோசை மாவிலேயே செய்யப்படுகிறது.  ஆனால் தோசை போல் அல்லாமல் சற்று  தடிமனான அப்பம் ஆகும். தக்காளி, வெங்காயம், மிளகாய், குடைமிளகாய், மற்றும் முட்டை கோசு கலவை போன்றவற்றுடன்  தயாரிக்கப்பட்டு சாம்பார், சட்னியுடன் பரிமாறப்படுகிறது.

4. குழி பணியாரம்: இட்லி, தோசை செய்யப்படும் மாவு கலவையினை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதை  வெல்லம் மற்றும் மிளகாய் ஆகியவற்றை பொறுத்து இனிப்பு அல்லது காரமாக செய்யலாம். பணியாரம் பல சிறிய குழிகளுடன் கூடிய சிறிய பாத்திரத்தில் வார்த்து தயாரிக்கப்படுகிறது. இது தென்னிந்தியாவில் குழிப் பணியாரம், பட்டு, அப்பே, குழியப்பா, குலிட்டு, யெரியப்பா, குண்டப்பொங்குலு, என பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது.

5. வடை: வடை என்பது இந்தியாவின் பல்வேறு வகையான பொரித்த தின்பண்டங்களுக்கான பொதுவான சொல். பருப்பு, உளுந்து, உருளைக்கிழங்கு போன்ற பல்வேறு பொருட்களிலிருந்து வடைகள் தயாரிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் காலை உணவாகவோ, சிற்றுண்டியாகவோ உண்ணப்படுகிறது. இதில் தயிர் வடை, சாம்பார் வடையும் அடங்கும்.

6. ஜிகர்தண்டா: ஜிகர்தண்டா என்பது தமிழ்நாட்டின் தென்னிந்திய நகரமான மதுரையில் தோன்றியது. குளிர்ந்த பால், பானம் மற்றும் குளிர் இனிப்பு ஆகும். இது ஆங்கிலத்தில் “கூல் ஹார்ட்” என்று அழைக்கப்படுகிறது. கோடைகாலத்தில் புத்துணர்ச்சிக்காகச் சாலையோர கடைகளில் தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. ஜிகர்தண்டா தயாரிக்கப் பால், பாதாம் பசை, நன்னாரி வேர் பானம், சர்க்கரை மற்றும் பனிக்கூழ்மம் ஆகியவை பயன் படுத்தப்படுகிறது.

7. பரோட்டா: தென்னிந்தியாவின்  சில பகுதிகளில் பிரபலமாக உள்ள தட்டையான அடுக்கு ரொட்டி ஆகும். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இது மைதா மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது மைதா, முட்டை,, எண்ணெய், அல்லது நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து மாவாக பிசைந்து தயாரிக்கப் படுகிறது. மாவை மெல்லிய அடுக்குகளாக அடித்து பின்னர் அதை பயன்படுத்தி உருண்டைகளை உருவாக்கி பந்து தட்டையாக உருட்டப்பட்டு வறுக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
விளாம்பழத்தில் உள்ள வியக்கத்தக்க பலன்கள்!
indian street foods!

8. பஜ்ஜி: மிருதுவான வெங்காய பஜ்ஜிகள், காரமான மிர்ச்சி பஜ்ஜிகளாக இருந்தாலும் தேங்காய் சட்னியுடன் நன்றாக ரசிக்கப்படும் உணவாகும். வெட்டப்பட்ட காய்கறிகள், உருளைக்கிழங்கு, அல்லது மிளகாய், வெங்காயத்தில் செய்யப்படுகிறது.

9. சப்பாத்தி: ஆட்டோ கோதுமைமாவு, உப்பு மற்றும் தண்ணீருடன் மென்மையான மாவை  பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

10. இடியப்பம்: இடியப்பம் என்பது  பாரம்பரிய தமிழ், கேரளா, துளு, மற்றும் இலங்கை உணவாகும். இது அரிசி மாவை நூல் வடிவத்தில் அழுத்தி வேகவைக்கப்பட்டு குருமா, தேங்காய்பாலுடன் பரிமாறப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com