Instant மாங்காய் ஊறுகாய் எப்படி செய்யணும் தெரியுமா? 

Mango pickle
Instant Mango pickle Recipe
Published on

நமது ஆரோக்கியத்திற்கு உணவு சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் நமது ஆரோக்கியத்திற்கு பெரிதளவில் பங்காற்றுவது உணவுதான். எனவே எதுபோன்ற உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடும்போது பல உடல்நலப் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். 

ஆரோக்கியமான உணவு என்றதும் எனக்கு முதலில் ஞாபகம் வருவது தயிர்சாதம்தான். தயிரில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.  பலருக்கு தயிர் சாதம் சாப்பிடப் பிடிப்பதில்லை. ஆனால் தயிர் சாதத்துடன் ஏதேனும் ஊறுகாயை தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் வேற லெவல் சுவையாக இருக்கும். தயிர் சாதமே சாப்பிடாதவர்கள் கூட ஊறுகாயை சைட் டிஷ்ஷாகக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். 

அதிலும், இந்தப் பதிவில் நான் சொல்லப்போவது போல மாங்காயில் உடனடியாக செய்யக்கூடிய பச்சை மாங்காய் ஊறுகாய் செய்து கொடுத்துப்பாருங்கள். தயிர் சாதத்திற்கு அடிமையாகி விடுவார்கள். சரி வாருங்கள் இந்தப் பதிவில் உடனடியாக அதிக சிரமமின்றி தயாரிக்கக் கூடிய பச்சை மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

  • 1 ‌ பெரிய ‌மாங்காய் 

  • 50 கிராம் சிவப்பு மிளகாய் தூள் 

  • 100 கிராம் நல்லெண்ணெய் 

  • 2 காய்ந்த மிளகாய் 

  • 1 ஸ்பூன் கடுகு 

  • 1 கைப்பிடி கருவேப்பிலை

செய்முறை: 

முதலில் மாங்காயை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் அதில் உங்களது கார அளவுக்கு ஏற்ப சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்குங்கள். 

அடுத்ததாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். பின்னர் அதில் காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு, அத்துடன் கறிவேப்பிலை போட்டதும் மாங்காய் கலவையில் சேர்த்து நன்கு கிளறி விடவும். அவ்வளவுதான் சூப்பரான சுவையில் பச்சை மாங்காய் ஊறுகாய் தயார். 

இதையும் படியுங்கள்:
புடவை கட்டினால் ஒல்லியாகத் தெரிவதற்கு சில டிப்ஸ்! 
Mango pickle

இந்த ஊறுகாயை அப்படியே நீங்கள் சாப்பிடலாம். நீண்ட நாட்கள் ஜாடியில் அடைக்க வேண்டும் என்பதில்லை. உடனடியாக ஏதேனும் சைட் டிஷ் தேவை என்றால் இந்த மாங்காய் ஊறுகாய் செய்து சாப்பிட்டுப் பாருங்கள். வேற லெவல் டேஸ்டில் இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com