மனிதனின் முடி உணவுகளில் பயன்படுத்தப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்! 

human hair
Is human hair used in Chocolate?
Published on

சாக்லேட் சுவையான இனிப்பு மட்டுமல்ல உலக அளவில் பலரால் விரும்பி உண்ணப்படும் உணவுகளில் ஒன்று. அதன் உற்பத்தி மற்றும் பொருட்கள் தொடர்பான பல்வேறு தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவலாக காணப்படுகின்றன. அவற்றில் மிகவும் பிரபலமான ஒன்று சாக்லேட் தயாரிப்பில் மனிதனின் முடி பயன்படுத்தப்படுகிறது என்பதாகும். இது சார்ந்த உண்மை என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். 

சாக்லேட்டில் பயன்படுத்தப்படும் பல மூலப் பொருட்களுடன் L-Cysteine எனப்படும் அமினோ அமிலமும் சேர்க்கப்படுகிறது. இது பல உணவுப் பொருட்களில் இயற்கையாகவே காணப்படுகிறது. இது உணவுப் பொருட்களின் அமைப்பு, சுவையை மேம்படுத்த பயன்படுத்துகிறார்கள். சாக்லேட்டின் பளபளப்பை அதிகரிக்கவும், அதன் அமைப்பை மேம்படுத்தவும் சாக்லேட் தயாரிப்பில் L-Cysteine பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக L-Cysteine-ஐ மூன்று முக்கிய மூலப் பொருட்களில் இருந்து தயாரிக்கிறார்கள். 

மனித முடி அல்லது விலங்கு இறங்குகள்: இது மிகவும் பழைய முறை. தற்போது பெரும்பாலான சாக்லேட் உற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த முறையில் முடி அல்லது இறகுகளை ஹைட்ரோகுளோரின் அமிலம் மற்றும் பிற வேதிப்பொருட்களுடன் சேர்த்து சூடாக்குகின்றனர். இந்த செயல்முறையின் போது L-Cysteine பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த செயல்முறையின் போது வெளிவரும் துர்நாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் காரணமாக பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.‌

பாக்டீரியா நொதித்தல்: L-Cysteine உற்பத்திக்கான மிகவும் பொதுவான நவீன முறை இதுதான். இந்த முறையில் பாக்டீரியாக்கள் க்ளூட்டானிக் அமிலத்தை L-Cysteine ஆக மாற்றுகின்றன. இந்த முறை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதால் இது பெரும்பாலான சாக்லேட் உற்பத்தியாளர்களால் விரும்பப்படுகிறது. 

தாவரங்கள்: சில சாக்லேட் உற்பத்தியாளர்கள் L-Cysteine-ஐ தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கின்றனர். இருப்பினும் இந்த முறை மிகவும் விலை உயர்ந்ததாகவும், குறைந்த அளவில் L-Cysteine மட்டுமே கிடைப்பதால் இது பயன்படுத்தப்படுவதில்லை. 

இதையும் படியுங்கள்:
மனித மூளையுடன் உருவாக்கப்பட்ட ரோபோ… சீனாவின் அற்புத கண்டுபிடிப்பு!
human hair

சாக்லேட்டில் மனித முடி பயன்படுத்துகிறது என்பது முற்றிலும் தவறான கூற்றாகும். சமூக ஊடகங்களில் மட்டுமே இவை பரவலாகக் காணப்படுகின்றன. பொது மக்களின் அறிவியல் அறிவு பற்றாக்குறையைப் பயன்படுத்தி இவ்வாறு தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. மேலும், சில நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இத்தகைய தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். 

பெரும்பாலான சாக்லேட் உற்பத்தியாளர்கள் பாக்டீரியா நொதித்தல் முறை மூலமாக தயாரிக்கப்பட்ட L-Cysteine-ஐ சாக்லேட் உற்பத்தியில் பயன்படுத்துகின்றனர். இந்த உற்பத்தி செயல்முறை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதால், சாக்லேட் உற்பத்தியில் மிகவும் நம்பகமான முறையாக உள்ளது. எனவே, இனி இதுபோன்ற தவறாக பரப்பப்படும் தகவல்களை நம்பாதீர்கள். மேலும், உண்மை என்ன என்று தெரியாமல் நண்பர்கள், குடும்பத்தினரிடம் தவறான தகவல்களைப் பகிர்வதையும் தவிருங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com