உலகமெங்கும் ரோபோ பயன்பாடு அதிகமாகி வரும் நிலையில், அதனைப் பற்றிய கண்டுபிடிப்புகளும் அதிகமாகி வருகிறது.
ஏஐ தொழில்நுட்பம் கொண்ட ரோபோக்கள் மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. என்ன தான் இப்போது ஏஐ டிரெண்டிங்கில் இருந்தாலும் கூட மனிதர்களின் நுண்ணறிவு அளவுக்கு, அவை சிறப்பாக செயல்பட முடியாது என்பதை ஆராய்ச்சியாளர்கள் உணர்ந்துள்ளனர். இதனால், மனிதர்களை போல செயல்படும் ரோபோக்களை கண்டிபிடிக்கும் ஆர்வத்தில், சீன ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.
அதாவது ரோபோக்களுக்கு மனித மூளைகளையே ஆய்வாளர்கள் வழங்கியுள்ளனர். சீனாவில் உள்ள டியான்ஜின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தான் மனித மூளை செல்களைப் பயன்படுத்திச் செயல்படும் ரோபோக்களை உருவாக்கி உள்ளனர்.
மனித உருவத்தை கொண்ட ரோபோ என்றாலே நாம் ஆச்சர்யப்படுவோம். அதுவும் மனித மூளை என்றால், சொல்லவா வேண்டும். மனித மூளையின் செல்களை கொண்ட இந்த ரோபோ வரும் காலத்தில் மிகப் பெரிய மாற்றத்திற்கு வித்திடும் என்றே தெரிகிறது. இது அறிவியல் உலகின் மிகப் பெரிய சாதனையாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. இதை brain on a chip என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது முதலில் மனித மூளை செல்களை உருவாக்கப் பயன்படுத்த இருந்த ஸ்டெம் செல்களை இந்த மூளைக்குப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த மூளை செல்கள் அதன் சிப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த மனித மூளையைக் கொண்ட ரோபோக்கள் வழக்கமான ரோபோக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. வழக்கமான ரோபோக்கள் ஏற்கனவே தங்களிடம் இருக்கும் பிரோகிராம்களை தான் நம்பி இருக்கும். ஆனால், இந்த புதிய வகை ரோபோக்களுக்கு மனித மூளை இருப்பதால் அதை வைத்து புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுமாம். மேலும், சுற்றி இருக்கும் சூழலுக்கு ஏற்ப தக்கவத்துக் கொள்ளுமாம்.
இது மேம்பட்ட தொழில்நுட்பம் தான் என்றாலும் மனித மூளை செல்களின் கற்றல் வேகம் மற்றும் உள்ளுணர்வு திறன்களுக்கு இது ஈடாகாது. மறுபுறம் இந்த வகை மனித மூளை கொண்ட ரோபோக்கள் குறைந்தபட்ச சக்தியைப் பயன்படுத்தி விரைவாகக் கற்றுக் கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சுமார் 8 லட்சம் மூளை செல்களை ஒரு சிப்பில் வளர்த்து, அதைத் தான் இந்த ரோபோ மீது பொருத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித மூளை பயன்படுத்தும்போது, இந்த ரோபோக்கள் மனிதர்களைவிட வேகமாகவும் தனித்தும் செயல்படும் என்று சிலர் கூறுகின்றனர். இதனால், மனித குலத்திற்கே ஆபத்தாகிவிடலாம் என்றும் கூறுகின்றனர்.