பலா காய் உணவில் இவ்வளவு நன்மை இருக்கா?

jackfruit benefits
jackfruit benefits

லா பழம், பலா கொட்டை. பலா சிப்ஸ் என பலவற்றையும் சாப்பிட்டிருப்போம். பலா காயை சமைத்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? முக்கனிகளில் ஒன்றான பலா பழத்தின் சுவையை அனைவரும் ருசித்திருப்போம். பலா காயை சமைத்து சாப்பிடும்போது எந்தளவுக்கு ருசியைத் தருமோ, அதே அளவுக்கு அதில் உடலுக்கு நலன் தரும் நன்மைகளும் உண்டு.

பலா காயை சமைத்து உணவில் சேர்த்துக் கொள்வதினால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தி ஆகிறது. பலா உடலின் வலிமையை அதிகரிக்கிறது. பலா காய் செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகும் என்பதால், அதனுடன் இஞ்சி, மிளகு, மிளகாய், சீரகம் சேர்த்துச் சமைத்து சாப்பிட வேண்டும். பலா காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது மூலநோய் வராமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பலா காயை காயவைத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் மாவு, மருத்துவ குணங்கள் கொண்டது. இது நீரிழிவு நோயை குணமாக்கும் தன்மை கொண்டது.

இந்த பலாக்காயை கொண்டு நான் வெஜ் சுவையில் பிரியாணி செய்து அசத்தலாம்.

தேவையான பொருட்கள்:

பலாக்காய் - 1\2 கிலோ

நெய் - 1 ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - ஒரு கப்

தேங்காய் பால் - 1 டம்ளர்

புதினா, கொத்தமல்லி - ஒரு கைபிடி

தயிர் - ஒரு ஸ்பூன்

லெமன் - 1 ஸ்பூன்

பிரியாணி மசாலா - தேவையான அளவு

பச்சைமிளகாய் - 3

பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 1

உப்பு - தேவையான அளவு

வெங்காயம் - 2

தக்காளி - 2

செய்முறை:

முதலில் குக்கரில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடேற்றி கொள்ளவும். பின்பு அதில் பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்கு வதக்கவும், அதை தொடர்ந்து நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். மேலும் அதில் சிறுதி இஞ்சி பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்பு நறுக்கி வைத்திருந்த தக்காளியை சேர்த்து பேஸ்ட் போல ஆகும் வரை வதக்கவும். அதன் பிறகு சிறுதளவு தயிர், லெமன் பழத்தை சிறுதி பிழிந்துவிட வேண்டும். இப்போது மொத்தமாக கிளறும் போது அழகாக ஒரு நிறமும், வாசனையும் கிடைக்கும். அதோடு புதினா, கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும். அதை தொடர்ந்து பிரியாணி மசாலைவை போட்டு கிண்டவும்.

இதையும் படியுங்கள்:
மழை கால அவசிய உணவு நெய்: ஏன் தெரியுமா?
jackfruit benefits

இதை தொடர்ந்து நறுக்கி வைத்திருக்கும் பலாக்காயை ஒரு வானலியில் வதக்கி விட்டு பிறகு இந்த மசாலாவுடன் சேர்க்கவும். அப்போதான் பலாக்காய் சாப்பிடும் போது ரொம்ப சுவையாக இருக்கும். அனைத்து மசாலாவும் பலாக்காய்க்குள் ஒன்று சேர்ந்த பிறகு அரிசிக்கு ஏற்ப தண்ணீர் மற்றும் தேங்காய்ப்பால் சேர்ந்து கொத்திக்கவிடவும். பிறகு அரிசியை அதனுள் போட்டு ஒரு கொதி வந்தவுடன் விசில் விடவும். 2 விசில் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி நெய் ஊற்றி கிளறவும். அவ்வளவு தான் டேஸ்ட்டியான பலாக்காய் பிரியாணி தயார். இது மட்டன் பிரியாணிக்கு மாறாக இருக்கும்.

இந்த ரெசிபியை அதிகமாக கல்யாண வீடுகளிலேயே பரிமாறுவார்கள். இனி, நீங்கள் பலா காய் சமையலை வீட்டிலேயும் செய்து அசத்தலாம். எப்போதும் ஒரே மாதிரி சமையல் செய்கிறோமோ என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு மாற்றானதாகவும் இருக்கும், வித்தியாசமான சுவையையும் கொடுக்கும். பலா காயை நன்கு வறுத்த பிறகு சமைத்தால் இன்னும் சுவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com