
இன்றைக்கு சுவையான ஜவ்வரிசி சாக்லேட் பாயாசம் மற்றும் பீட்ரூட் அல்வா ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
சாக்லேட் ஜவ்வரிசி பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்.
ஜவ்வரிசி - 1 கப்.
பால் - 1 கப்.
கொக்கோ பவுடர் - 2 தேக்கரண்டி.
சர்க்கரை - 1 கப்.
சாக்லேட் ஜவ்வரிசி பாயாசம் செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் 1 கப் ஜவ்வரிசியை சேர்த்து தண்ணீர் விட்டு 20 நிமிடம் நன்றாக ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது ஃபேனில் ஜவ்வரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
இதில் 1கப் பாலை சேர்த்துவிட்டு அத்துடன் 2 தேக்கரண்டி கொக்கோ பவுடரை சேர்த்து கட்டியில்லாமல் கலந்துவிடவும். ஜவ்வரிசி நன்றாக வெந்ததும் கடைசியாக 1 கப் சர்க்கரை சேர்த்து கலந்துவிட்டு 15 நிமிடம் மூடி வைத்துவிடவும். ஜவ்வரிசி நன்றாக வெந்து சுண்டிய பிறகு இறக்கினால் சுவையான ஜவ்வரிசி சாக்லேட் பாயாசம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
பீட்ரூட் அல்வா செய்ய தேவையான பொருட்கள்.
நெய் - தேவையான அளவு.
முந்திரி - 10.
திராட்சை - 10
பீட்ரூட் - 2
பால் - 1 கப்.
நாட்டு சர்க்கரை - 1/2 கப்.
பீட்ரூட் அல்வா செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் 2 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி10, திராட்சை 10 சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது கடாயில் 1 குழிக்கரண்டி நெய் சேர்த்து 2 துருவிய பீட்ரூட்டை சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு பால் 1 கப்பை சேர்த்து 5 நிமிடம் மூடி வேகவிடவும்.
நன்றாக சுண்டி வரும் சமயம் ½ கப் நாட்டு சர்க்கரையை சேர்த்து கலந்து விடவும். இப்போது அல்வா பதத்திற்கு நன்றாக பீட்ரூட் வரும்போது, கடைசியாக வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சையை சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால் சுவையான பீட்ரூட் அல்வா தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.