வீட்டிலேயே செய்யலாம் ஜவ்வரிசி வடம் (வத்தல்)... அட ரொம்ப ஈசிங்க! 

Javvarisi Vadam Recipe in Tamil
Javvarisi Vadam Recipe in Tamil

மக்களுக்கு அப்பளம் எந்த அளவுக்கு பிடிக்குமோ அதே அளவுக்கு வீட்டில் செய்யும் வத்தல் மிகவும் பிடிக்கும். அதுவும் வெயில் காலம் வந்துவிட்டால் போதும் வீட்டில் மீந்த சாதத்தை அப்படியே வத்தல் போட்டு விடுவார்கள். சிலர் கோடை காலத்தில் வத்தல் தயாரித்து வைத்து அந்த ஆண்டு முழுவதும் வைத்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பர். எனவே இந்த பதிவில் சற்று வித்தியாசமாக எளிமையான முறையில் ஜவ்வரிசி வடம் (வத்தல்) எப்படி செய்வது? எனப் பார்க்கப் போகிறோம். 

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி 1 கிலோ.

தண்ணீர் - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

மிளகாய் விதை - 1 ஸ்பூன் 

சீரகம் - 1 ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் ஜவ்வரிசியை எடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும். அடுத்ததாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 

பின்னர் அதில் ஜவ்வரிசியை சேர்த்து கிளறங்கள். பின் அதில் உப்பு, மிளகாய் விதை, சீரகம் மூன்றையும் சேர்த்து நன்கு கலக்கவும். 

ஜவ்வரிசி நன்றாக வெந்ததும் மாவு பதத்திற்கு மாறிவிடும். அப்போது அடுப்பை அணைத்து ஜவ்வரிசி கலவை ஆறியதும், கருவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கி, சாதாரணமாக வத்தல் செய்வது போல, கீழே ஒரு காட்டன் துணியை விரித்து கொஞ்சம் கொஞ்சமாக விடவும். 

இதையும் படியுங்கள்:
நன்றாகத் தூங்கினாலும் சோர்வா இருக்கா? ஜாக்கிரதை!
Javvarisi Vadam Recipe in Tamil

பின்னர் இதை ஒருநாள் முழுவதும் வெயிலில் காயவைத்து ஜவ்வரிசி காய்ந்ததும் லேசாக தண்ணீர் தெளித்து வெளியே எடுத்து, மீண்டும் காய வைத்து டப்பாவில் அடைத்துக் கொள்ளுங்கள். 

அவ்வளவுதான் உங்களுக்கு வேண்டிய சமயத்தில் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் பொரித்து சாப்பிட்டால், வத்தல் மொறு மொறுவென, சூப்பர் சுவையில் இருக்கும். இதை இப்போதே முயற்சித்து பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com