ஜவ்வரிசியில் ஜம்மென்று நாலு வகை ரெசிபிகள்!

Sweet recipes
Sweet recipes
Published on

ஜவ்வரிசி கேசரி

தேவை:

பசும்பால் - 2 கப்

சன்ன ஜவ்வரிசி - 1 கப் 

சர்க்கரை - 2 கப் 

தண்ணீர் - அரை கப் குங்குமப்பூ - சிறிது

ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன் 

முந்திரிப் பருப்பு - 8

நெய் - அரை கப் 

செய்முறை: 

அடிகனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு, ஜவ்வரிசியை வறுக்கவும். பாலையும், நீரையும் கலந்து கொதிக்கவிட்டு, வறுத்த ஜவ்வரிசியை அதில் போட்டு வேகவைக்கவும். பின்னர் சர்க்கரை சேர்த்து, நெய் விட்டுக் கிளறவும். கெட்டியாகும்போது பாலில் கரைத்த குங்குமப்பூ, ஏலக்காய்தூள்,  நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கி வைக்கவும். சுவையான ஜவ்வரிசி கேசரி தயார்.

ஜவ்வரிசி தோசை 

தேவை:

பச்சரிசி -  1 கப்

சன்ன ஜவ்வரிசி - 2 கப் 

புளித்த மோர் - 2 கப் 

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

தயிர் - 2 ஸ்பூன் 

தாளிக்க கடுகு, சீரகம் - தலா ஒரு ஸ்பூன் 

கறிவேப்பிலை - சிறிது 

நறுக்கிய பச்சை மிளகாய் - 2

செய்முறை: 

ஜவ்வரிசியையும், பச்சரிசியையும் 2 மணி நேரம் நேரில் ஊற வைத்து, நீரை வடித்துவிட்டு, நைசாக அரைத்து தயிரையும், உப்பையும் சேர்க்கவும். வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, பச்சை மிளகாயை வதக்கி போடவும். பின்னர்  புளித்த மோரில் எல்லாவற்றையும் கலந்து தோசைகளாக வார்க்கவும்.

இதையும் படியுங்கள்:
சத்தும் சுவையும் ஒருங்கே கூடிய சப்போட்டா பழ அல்வா - பாசி பருப்பு அல்வா!
Sweet recipes

ஜவ்வரிசி பொங்கல் 

தேவை:

ஜவ்வரிசி - 2 கப்  பாசிப்பருப்பு - அரை கப் 

நெய் - 2 டேபிள்ஸ்பூன் 

தாளிக்க - சீரகம், மிளகு   

உப்பு - தேவைக்கேற்ப 

செய்முறை: 

ஜவ்வரிசியையும், பசிப்பருப்பையும் தனித்தனியே குழைய வேக வைக்கவும். வெந்ததும் இரண்டையும் கலந்து, உப்பு போட்டுக் கிளறவும். சின்ன வாணலியில் நெய் விட்டு, மிளகு, சீரகம் தாளித்து, பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கி வைக்கவும். சுவையான ஜவ்வரிசி பொங்கல் தயார்.

ஜவ்வரிசி பகாளாபாத்

தேவை: 

ஜவ்வரிசி -1 கப் 

தயிர் -1 கப்

தாளிக்க - கடுகு, கறிவேப்பிலை நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று, இஞ்சி துருவல் - அரை ஸ்பூன் 

மல்லித்தழை - சிறிது 

நெய் - 2 ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப  

செய்முறை:

ஜவ்வரிசியை குழைய வேகவைக்கவும். நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சித் துருவலை வதக்கி, தயிரில் கலந்து, உப்பு சேர்த்து, மல்லி தழை தூவவும். பின்னர் வெந்த ஜவ்வரிசியை தயிர்க் கலவையில் கொட்டிக் கிளறினால்,  கோடைக்கேற்ற குளு குளு ஜவ்வரிசி பகாளாபாத் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com