
ஜவ்வரிசி அல்வா
செய்ய தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி- ஒரு கப்
சர்க்கரை- 4 கப்
சோள மாவு -2 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு- ரெண்டு டேபிள் ஸ்பூன்
ஆரஞ்சு கலர் பவுடர்- இரண்டு சிட்டிகை
ஏலக்காய் பொடி -அரை டீஸ்பூன்
நெய் -5 டேபிள் ஸ்பூன்
துருவிய பாதாம் ,முந்திரி-2 கைப்பிடி அளவு
செய்முறை;
ஜவ்வரிசியை 9 மணி நேரம் ஊறவைக்கவும். மைதா மாவையும், சோளமாவையும் தனித்தனியாக கட்டியில்லாமல் கரைத்து வைக்க வேண்டும். பின்னர் சர்க்கரையை சிறிது நீர்விட்டு கரைத்து அடுப்பில் வைக்கவும். இவை கொதிக்கும் போது எலுமிச்சைச் சாறு சேர்த்து தீயை அணைக்கவும் .ஊறிய ஜவ்வரிசி, கலர் பவுடர் கரைத்து வைத்துள்ள மாவுகளை சேர்த்து வாயகன்ற அடி கனமான பாத்திரத்தில் போட்டு, மிதமான தீயில் வைத்து கை விடாமல் கிளறவும்.
பின்னர் சர்க்கரை நீர் சேர்த்துகிளறி, பிறகு நெய்யை சேர்த்து, பாதாம், முந்திரி, ஏலக்காய் சேர்த்து கிளறவேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும். வித்தியாசமான ருசியில் அசத்தலான ஜவ்வரிசி அல்வா இது.
சீக்கிரமாக செய்யவேண்டும் என்றால் ஜவ்வரிசியை மிக்ஸியில் பொடித்து நன்றாக ஊறவைத்து செய்துவிடலாம். ஊறுவதற்கு அதிக நேரம் ஆகாது. இதனால் சீக்கிரம் செய்துவிட முடியும்.
மரவள்ளிக்கிழங்கு பருப்பு வடை
தேவையான பொருட்கள்:
துருவிய மரவள்ளிக்கிழங்கு -ஒரு கப்
ஊறவைத்த கடலை பருப்பு- ஒரு கப்
வர மிளகாய் -ஆறு
சோம்பு -ஒரு டேபிள் ஸ்பூன்
பொடியாக அறிந்த வெங்காயம் - அரை கப்
எண்ணெய், உப்பு -தேவைக்கேற்ப
மல்லித்தழை ,கருவேப்பிலை பொடியாக அரிந்தது- கைப்பிடி அளவு.
செய்முறை:
பருப்புடன் மிளகாய், சோம்பு சேர்த்து அரைத்துக் கொண்டு, துருவிய மரவள்ளி கிழங்கையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். பின்னர் அதனுடன் வெங்காயம், தனியா, கருவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வடைகளாகத் தட்டி கொதிக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். டீ யுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.