ஜில்லுனு கலக்கலான குலுக்கி சர்பத்... கோடைக்கு ஒரு ட்ரீட்!

 குலுக்கி சர்பத்...
குலுக்கி சர்பத்...

குலுக்கி சர்பத் கேரளாவில் மிகவும் பிரபலம். கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் சாஜி என்னும் ரோட்டுக்கடை வியபாரியே தயாரித்து பிரபலப்படுத்தினார். கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் இந்த சர்பத். இதற்காக பயன்படுத்தும் பொருட்கள் மிகவும் எளிமையாக வீட்டிலேயே கிடைக்க கூடியதாகும். காரத்திற்கு இஞ்சி துண்டு, பச்சை மிளகாய் பயன்படுத்தலாம்.  குலுக்கி சர்பத் இனிப்பும், காரமும் கலந்த ஒரு புதவித சுவையை கொடுக்கும் சர்பத்தாகும்.

குலுக்கி சர்பத் செய்ய தேவையான பொருட்கள்:

சப்ஜா விதை -2 தேக்கரண்டி.

சக்கரை -2 தேக்கரண்டி.

எழுமிச்சை பழம்-1.

பச்சை மிளகாய்-1.

உப்பு-1 சிட்டிகை.

புதினா இலை- சிறிதளவு.

ஐஸ்கட்டி- தேவையான அளவு.

தண்ணீர்- தேவையான அளவு.

குலுக்கி சர்பத் செய்முறை விளக்கம்:

ரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி சப்ஜா விதையை எடுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். சுமார் ஐந்து நிமிடம் ஊறவைத்த பின், பிறகு ஒரு எழுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக கட் செய்து வைத்துக்கொள்ளவும். பிறகு 2 பச்சை மிளகாயை எடுத்து அதை நீட்டு வாக்கில் கீறிவிடவும். அப்போது தான் அதன் காரம் ஜூஸில் இறங்கும்.

இதையும் படியுங்கள்:
இந்த 14 விஷயங்கள் பணத்தைத் தாண்டி உங்களுக்கு மதிப்பைப் பெற்றுத் தரும்!
 குலுக்கி சர்பத்...

முதலில் எழுமிச்சை பழத்தின்  ஒரு சின்ன துண்டை கண்ணாடி தம்ளரில் போடவும். பிறகு அதில் 1 சிட்டிகை உப்பு, சக்கரை 2 தேக்கரண்டி சேர்க்கவும். சக்கரை வேண்டாம் என்றால் தேன் கூட பயன்படுத்திக்கலாம். ஒரு எழுமிச்சைப்பழ சாறை இத்துடன் கலந்து கொள்ளவும். சப்ஜா விதைகள் 2 தேக்கரண்டி, கீறின பச்சை மிளகாய், கொஞ்சம் புதினா இலை சேர்க்கவும். அத்துடன் ஐஸ் கட்டியும் சேர்த்து கடைசியாக தண்ணீரை ஊற்றவும்.

பிறகு, தம்ளரில் ஊற்றி வேறொரு தம்ளரை போட்டு மூடி நன்றாக குலுக்கவும். இப்போது கோடைக்கு குளிர்ச்சியான குலுக்கி சர்பத் ரெடி. இந்த கோடைக்கு இதமாக வீட்டிலேயே செஞ்சு அசத்துங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com