கலக்கலான பிஸிபேளாபாத் செய்யலாமா?

பிஸிபேளாபாத்...
பிஸிபேளாபாத்...Image credit - youtube.com
Published on

திய உணவுக்கு என்ன செய்வது என்று யோசிப்பது ஒரு சவால். ஆனால் அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை விருந்து மற்றும் விழாக்களில் மட்டுமல்ல வீடுகளிலும் அடிக்கடி இடம்பெறும் ரெசிபியாக உள்ளது கர்நாடக மாநிலத்தின் பிஸிபேளாபாத். நம்மூர் பருப்பு சாம்பார்தானே என நினைப்பவர்களுக்காக இதோ அதன் செய்முறை.

முதலில் இந்த சாதம் செய்யத் தேவையான சாம்பார் பொடியை அரைத்துக் கொள்வோம்.

பொடி செய்முறை:
அடி கனமான வாணலியில் கால் கப் கொத்தமல்லி விதைகள்,  கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு,  சீரகம் தலா 1 ஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன் , 1  டீஸ்பூன் எள், பெருங்காயம் சிறிது இவற்றைப் போட்டு குறைவான தீயில் வாசம் வரும்வரை வறுக்கவும் அதிலேயே மிளகு அரை ஸ்பூன்,  ஏலக்காய் 4 , 2 அங்குல பட்டை , கிராம்பு 5 சேர்த்து கருகாமல் வறுத்து ஆறியதும் மிக்சியிலிட்டுப் பொடித்துக் கொள்ளவும்.பொடி தயார்.

இப்போது பிஸிபேளாபாத் செய்முறை காண்போம்.
தேவை:


பச்சரிசி அல்லது சாப்பாட்டு புழுங்கல் அரிசி - 2 கப்
துவரம். பருப்பு - 3/4 கப்
பச்சை பட்டாணி -50 கிராம்
கேரட் - 2
தக்காளி-  4
வெங்காயம் - 2
நெய் : 50 கிராம்
முந்திரி : 10
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1டீஸ்பூன்
சாம்பார் பொடி- 1 டே ஸ்பூன்( தயார் செய்தது)
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு -தேவைக்கு
கருவேப்பிலை  கொத்துமல்லித்தழை - சிறிது

செய்முறை:

அரிசியையும் பருப்பையும் ஒன்றாகக் கழுவி வையுங்கள். அடுப்பில் குக்கர் வைத்து அதில் தேவையான எண்ணெய் அல்லது நெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, சீரகம், கடுகு, கருவேப்பிலை சேர்த்து பொரிய விடுங்கள். அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி  நறுக்கிய தக்காளியும் சேர்த்து வதக்கவும். அதில்  பச்சை பட்டாணி, நறுக்கிய கேரட் சேர்த்து நல்லா வதக்கிட்டு  தேவையான அளவு உப்பு, சாம்பார் பொடி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வதக்கி அதில் அரிசி பருப்புக்கு ஏற்ற அளவில் தண்ணீர் சேர்த்து நல்லா கொதிக்கவிட்டு கரைத்த புளித்தண்ணீர்  சேர்த்துக்கொதி வந்ததும் துவரம் பருப்பு, அரிசி சேர்த்து கொதிக்க விட்டுட்டு குக்கர் மூடி 2 அல்லது தேவையான விசில் விட்டு வேகவைக்கவும்.

இதையும் படியுங்கள்:
இலக்கை நோக்கி பயணிக்கும் முன் இந்த 5ஐ படியுங்கள்!
பிஸிபேளாபாத்...

வெந்ததும் குக்கரைத் திறந்து உடைத்த முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சாதத்தோட சேர்த்து நன்றாக கிளறிவிட்டு மேலே கொத்துமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறினால் "ஆஹா" என்பார்கள் ருசிப்பவர்கள். இதில் காய்கள் சேர்ப்பது அவரவர் சாய்ஸ். கத்திரிக்காய், முள்ளங்கி ஏற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com