மருத்துவக் குணம் கொண்ட கல்யாண முருங்கை: பொரியல் முதல் பூரி வரை!

Kalyana Murungai leaf
Kalyana Murungai leaf medicinal properties
Published on

கல்யாண முருங்கை இலை பொரியல்

தேவை:

கல்யாண முருங்கை இலை – 2 கப் (சுத்தம் செய்து நறுக்கியது)

வெங்காயம் – 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2

தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1 டீஸ்பூன்

மிளகாய் தூள், மஞ்சள் தூள்–தலா ½ டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். முருங்கை இலைகளை சேர்த்து நன்றாக கிளறவும். சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வேகவிடவும். உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து கிளறவும். இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். சுவையான கல்யாண முருங்கை இலை பொரியல் ரெடி.

இதையும் படியுங்கள்:
சுவை கூட்டும் சமையல் வித்தைகள்… இதோ சில சமையல் குறிப்புகள்!
Kalyana Murungai leaf

கல்யாண முருங்கை இலை ரசம்

தேவை:

கல்யாண முருங்கை இலை – 1 கப் (சுத்தம் செய்து நறுக்கியது)

புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு

தக்காளி – 1

மிளகு, சீரகம் – 1 டீஸ்பூன

பூண்டு – 4 பல்

கருவேப்பிலை – சிறிதளவு

கடுகு – ½ டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 1

நெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:

புளியை வெந்நீரில் ஊறவைத்து புளிச்சாறாக எடுத்து கொள்ளவும்.

மிளகு, சீரகம், பூண்டை நசுக்கி வைக்கவும். கடாயில் புளிச்சாறு, தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

பின்னர் அதில் முருங்கை இலைகளைச் சேர்த்து 3–4 நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் நசுக்கிய மிளகு, சீரக, பூண்டு விழுது சேர்க்கவும். கடைசியாக நெய்யில் கடுகு, வர மிளகாய், கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சுவையான, ஆரோக்கியமான கல்யாண முருங்கை ரசம் தயார்.

கல்யாண முருங்கை வடை

தேவை:

முருங்கை இலை - அரை கப்

புழுங்கல் அரிசி - 1 கப்

மிளகு, சீரகம் - தலா 1 ஸ்பூன்

உப்பு , எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை:

புழுங்கல் அரிசியை ஊறவைக்கவும். கல்யாண முருங்கை இலைகளை நரம்பு நீக்கி, சுத்தம் செய்யவும். ஊறிய அரிசியை களைந்து, அதனுடன் கல்யாண முருங்கை இலை, மிளகு, சீரகம், உப்பு சேர்த்து அரைக்கவும். மாவை வடைகளாக தட்டி, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான, சத்தான கல்யாண முருங்கை வடை ரெடி. கல்யாண முருங்கை இலை, சளி, இருமல் தொந்தரவுகளை போக்கக்கூடியது.

இதையும் படியுங்கள்:
நாவூறும் சுவையில் கிரிஸ்பி பொட்டேடோ தோசை - செய்வது எப்படி?
Kalyana Murungai leaf

கல்யாண முருங்கை இலை பூரி.

தேவை:

கோதுமை மாவு – 2 கப்

கல்யாண முருங்கை இலை – 1 கப் (சுத்தமாக கழுவி நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (சிறியதாக நறுக்கியது)

இஞ்சி விழுது – 1 டீஸ்பூன்

சீரகம் – ½ டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – பொரிக்க

செய்முறை:

கோதுமை மாவுடன் உப்பு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, நறுக்கிய முருங்கை இலை சேர்த்து கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சற்று கடினமாக மாவு பிசையவும். சிறிது நேரம் மூடி வைத்துக்கொள்ளவும். சிறிய உருண்டைகளாக உருட்டி, பூரியாக உருட்டவும். சூடான எண்ணெயில் ஊற்றி, பூரி உச்சியிலும் எடுத்து வைக்கவும். சாம்பார், சட்னி அல்லது உருளைக்கிழங்கு மசாலாவுடன் சூடாக பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com