சுவை கூட்டும் சமையல் வித்தைகள்… இதோ சில சமையல் குறிப்புகள்!

Cooking tricks...
Cooking tricks...Recipes!
Published on

சத்தை அடுப்பிலிருந்து இறக்கும் முன் ஒரு ஸ்பூன் கறிவேப்பிலைப் பொடியைத்தூவி இறக்கினால் ரசத்தின் சுவையே அலாதிதான்.

கோதுமை தோசைக்கு மாவு கரைக்கும்போது சில சமயம் கட்டி கட்டியாக இருக்கும். மாவை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றிவிட்டு எடுத்தால் மிருதுவாகிவிடும்.

ரவா தோசைமாவில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்தால் தோசை மொறுமொறுவென்று சுவைபட இருக்கும்.

சாதத்துக்கு தொட்டுக்கொள்ளும் தேங்காய்த் துவையலில் புளிக்குப்பதிலாக மாங்காயை சேர்த்து அரைத்தால் தேங்காய்த்துவையல் சுவை மிகுந்து இருக்கும்.

தட்டை, சீடை போன்ற பட்சணங்கள் செய்யும்போது, தேங்காய்ப்பால் விட்டு செய்து பாருங்கள். செய்யும் பட்சணங்களின் சுவையும், ருசியும் கூடும்.

தோசைமாவு புளித்துவிட்டதா? கவலை வேண்டாம். மாவில் மூன்று பிடி ஜவ்வரிசியை ஊறவைத்து பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பிசைந்து சுவையான போண்டாக்களாக பொரித்து எடுக்கலாம்.

தாளிதம் செய்யும் எண்ணெயில் சிறிதளவு உப்பு போட்டுவிட்டு தாளிதம் செய்தால் கமறல் ஏற்படாது.

மாங்காய் தொக்கு செய்யப்போறீங்களா? தொக்கில் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கிளறுங்கள். தொக்கு சுவை மிகுந்து இருக்கும்.

கேசரி செய்யும்போது நீரின் அளவைக்குறைத்து, அதே அளவு பால் கலந்து செய்யலாம். கேசரி பிரமாத சுவையுடன் இருக்கும்.

மைதாமாவு நான்கு பங்கு, ரவை ஒரு பங்கு போட்டு சுவையான பூரி செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
டீ டைம் ஸ்பெஷல்: கடையை விட சுவையான மொறுமொறு கச்சோரி!
Cooking tricks...

தக்காளியுடன் பச்சைப்பட்டாணி சேர்த்து அவியல் செய்தால் பூரி, சப்பாத்தி, தோசை போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

ரசம் செய்யும்போது, அதை அடுப்பிலிருந்து இறக்கும்முன் ஒரு கரண்டி தேங்காய்ப்பால் சேர்த்து, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்தால் செய்யும் ரசம் சூப்பர் சுவையில் இருக்கும்.

முட்டைக்கோஸைத் துருவி நன்றாக வதக்கி மிளகாய், உப்பு,புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவை மிகுந்த கோஸ் துவையல் தயார்.

சாம்பாருக்கு போடும் துவரம் பருப்பை இலேசாக வறுத்து வேகவைத்தால் சாம்பார் விரைவில் கெட்டுப்போகாது.

சர்க்கரைப்பொங்கல் செய்யும்போது பாலுக்கு பதில் பால் பவுடர் சேர்த்துச் செய்தால் பொங்கல் சுவையோ சுவை.

சேமியா உப்புமா சுவைபட இருக்க அடுப்பிலிருந்து இறக்கும்முன் ஒரு கரண்டி தயிரைக்கலந்து, அத்துடன் இரண்டு ஸ்பூன் பச்சைத் தேங்காய் எண்ணையை விட்டு இறக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
நாவூறும் நால்வகை சமோசாக்கள்: செய்முறை விளக்கம்!
Cooking tricks...

தக்காளி சாஸ் காலியாகிவிட்டால் கடைசியாய் பாட்டிலில் இருப்பது எடுக்க வராது. அதில் சிறிது நீர் விட்டு ரசம் செய்யும்போது அதில் ஊற்றிப்பாருங்கள். ரசத்தின் சுவை அதிகரிக்கும்.

சாம்பார், வற்றல்குழம்பு போன்றவற்றில் காரம் அதிகமாகி விட்டதா?அதில் நல்லெண்ணெயை ஊற்றி கொஞ்ச நேரம் கொதிக்க விடுங்கள். காரம் குறைந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com