கமகமக்கும் கசகசா புலாவ் - மணமணக்கும் மக்காச்சோளம் பிரியாணி!

கசகசா புலாவ்
கசகசா புலாவ்Image credit - youtube.com

குழந்தைகளுக்கு சத்தாகவும் அதே சமயம் பள்ளிகளுக்கு மதிய உணவு தந்துவிட பிரியாணி வகைகளை தேடுவோம். சாதாரணமாக தக்காளி பிரியாணி , எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் இந்த வகையில் இருக்கும் சாத வகைகளை சாப்பிட்டு பிள்ளைகள் அலுத்துவிடுவார்கள். இனி பள்ளிகள் துவங்கும் நேரம் என்பதால் இது போன்ற வித்தியாசமான பிரியாணி வகைகளை செய்து அசத்துங்கள்.

கசகசா புலாவ்:

தேவையானவை:


சீரக சம்பா அரிசி - ஒரு கப்
பட்டை கிராம்பு ஏலக்காய் - தலா 2
சோம்பு - சிறிது
கசகசா - ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரி -5
இஞ்சி பூண்டு விழுது-  ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
வெங்காயம் ஒன்று
எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு –தேவைக்கு


செய்முறை:

சீரகம் சம்பா அரிசியை நன்கு கழுவி நீர் வடித்துக் கொள்ளவும்.சிறிது சுடுநீரில் கசகசா முந்திரியை ஊறவைத்து நைசாக அரைத்து எடுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலையுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு அரைத்த கசகசா விழுது, உப்பு , தேவையான நீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் கழுவி வைத்த அரிசியை சேர்த்து கிளறி குக்கரை மூடி வெயிட் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கினால் உதிர் உதிரான கசகசா புலாவ் ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள வெஜிடபிள் குருமா அல்லது பச்சடி சூப்பர். கசகசா குடல் புண் வயிற்றுப் புண்கள் ஆற்றும்  மிகச்சிறந்த நிவாரணி.
குறிப்பு - சாதாரண சாப்பாட்டு  அரிசியிலும் இதை டிரை செய்யலாம். எளிதாக செய்ய ஏற்ற டிஷ் இது. புதினா வாசம் வேண்டும் என்றால் சிறிது சேர்க்கலாம். அதிகம் சேர்த்தால் கசகசாவின் தன்மை குறையும்.

மக்காச்சோளம் பிரியாணி:

தேவை:

பாசுமதி   அல்லது சீரகசம்பா அரிசி - ஒரு கப்
வேக வைத்த மக்காச்சோளம் - ஒரு கப் பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
வரமிளகாய் & பச்சை மிளகாய்- தலா 2
தேங்காய் துருவல்-  2 டீஸ்பூன்
பட்டை கிராம்பு தலா - 2
பிரிஞ்சி இலை - 1
முந்திரி-  4
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பொதினா கொத்தமல்லித்தழை - தலா அரை கைப்பிடி அளவு 
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

மக்காச்சோளம் பிரியாணி
மக்காச்சோளம் பிரியாணிImage credit - youtube.com

செய்முறை:
முதலில் அரிசியை நன்கு கழுவி தேவையான நீர் விட்டு உப்பு சேர்த்து உதிராக  வடித்துக் கொள்ளவும். சோளத்தை உதிர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
மிக்சியில் மிளகாய்கள், தேங்காய் துருவல்,  முந்திரி ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். அடிகனமான வாணலியில் எண்ணெய் அல்லது நெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு தாளித்து பிரிஞ்சி இலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி,  இஞ்சி பூண்டு விழுது விட்டு வாசம் போக வதக்கிய பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு வதக்கி வேகவைத்த சோளம், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் கிளறி எடுத்து வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?
கசகசா புலாவ்

இதில் ஏற்கனவே வெந்து உதிர்த்த சாதம் சேர்த்து நன்றாக கிளறி நறுக்கிய புதினா கொத்தமல்லி தழை தூவினால் மணமணக்கும் மக்காச்சோளம் பிரியாணி ரெடி. தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் நல்ல காம்பினேஷன். மக்காச்சோளம் பிள்ளைகள் விரும்பும் ஒன்று.


குறிப்பு - தரமான மக்காச்சோளம் தேர்வு செய்யவும். எண்ணெய் பாதி நெய் மீதி இருக்கலாம். புதினாவை அரைத்தும் சேர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com