
தேவையான பொருட்கள்:
1 கப் - கம்பு
3 கப் - தண்ணீர்
தேவையான அளவு - உப்பு
செய்முறை:
1. கம்பை சுத்தம் செய்து தண்ணீரில் 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
2.தண்ணீரை வடிகட்டி சிறிது நேரம் வைத்திருக்கவும்.
3.மிக்ஸியில் கொரகொரப்காக அடித்து கொள்ளவும்.
4.3 கப் தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும். உப்பு சேர்க்கவும்.
5.தண்ணீர் கொதித்த பின்னர் கம்பு சேர்த்து கிளறவும்.
6.கம்பு வெந்து கெட்டிபட்டவுடன் கைகளில் சிறிது தண்ணீர் தொட்டு கொண்டு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
7.சாம்பார், தயிர்,மோர் சேர்த்து எடுத்து கொள்ளலாம்.