கன்னியாகுமரி ஸ்பெஷல் முந்திரி கொத்து செய்யலாமா?

முந்திரி கொத்து
முந்திரி கொத்து

ச்சைப்பயிறு ஒரு கப் 

வெல்லம் 3/4 கப் 

அரிசி மாவு 1/2 கப் 

மைதா மாவு 1/4 கப்

உப்பு 1 சிட்டிகை

துருவிய தேங்காய் 1/2 கப் 

ஏலப்பொடி ஒரு ஸ்பூன் 

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் 

எள் 2 ஸ்பூன்

பச்சைப்பயிறு ஒரு கப் அளவு எடுத்து வெறும் வாணலியில் போட்டு நன்கு  வறுக்கவும். எள் 2 ஸ்பூன் அளவு எடுத்து அதனையும் நன்கு பொரியும் வரை வறுத்து எடுக்கவும். தேங்காயை அரைக்கப் அளவு துருவி எடுத்து சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். பச்சைப் பயறை மிக்ஸியில் போட்டு நைஸ் ரவையாக பொடித் தெடுக்கவும். இத்துடன் வறுத்த எள், தேங்காய் துருவல், ஏலப்பொடி அனைத்தையும் ஒன்றாக கலந்து விடவும்.

வெல்லத்தை சிறிதளவு நீர் விட்டு கொதிக்க விடவும். பாகுபதம் எதுவும் தேவையில்லை. பிசுக்கு பதத்தில் இருந்தாலே போதும். கலந்து வைத்துள்ள மாவில் வெல்ல கரைசலை கொட்டி கிளறவும். சூட்டுடன் இருக்கும் போதே சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் மூளையை மாற்றும் 3 பழக்கங்கள்!
முந்திரி கொத்து

அரை கப் அரிசி மாவுடன் கால் கப் மைதா மாவு, உப்பு 1 சிட்டிகை, மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கட்டியில்லாமல் கரைக்கவும். உருட்டி வைத்துள்ள சின்ன சின்ன உருண்டைகளை மூன்று மூன்றாக சேர்த்து எடுத்து மாவில் முக்கி எண்ணெயில் பொரித்தெடுக்க சுவையான முந்திரிக்கொத்து தயார்.

இது கன்னியாகுமரி ஸ்பெஷல் ஸ்வீட்டாகும். செய்வது எளிது. ருசியும் அபாரமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com