பெரும்பாலான நபர்கள் என நினைக்கிறார்கள் என்றால், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு மூளையின் செயல்பாடு கணிசமாக குறைந்துவிடும் என நினைக்கின்றனர். இதன் காரணமாகவே பலர் தங்களால் செய்ய முடியாத விஷயங்களில் இருந்து தப்பிப்பதற்கு எனக்கு வயதாகிவிட்டது, மூளை மழுங்கிவிட்டது என சொல்வார்கள். ஆனால் இது உண்மையல்ல. வயதான புதிய விஷயங்களை கற்பதற்கு கடினமாக இருக்கலாம், ஆனால் அவற்றை கற்கவே முடியாது என சொல்ல முடியாது. நாம் சாகும் வரை நம்முடைய மூளைக்கு புதிய பழக்கங்களை நாம் சொல்லித்தர முடியும். பழக்கவழக்கங்கள் தான் நம்முடைய வாழ்க்கையை கட்டமைக்கிறது. எனவே இந்த பதிவில் உங்கள் மூளையை சிறப்பாக மாற்றும் 3 பழக்கங்கள் பற்றி பார்க்கலாம்.
கண்ட்ரோல் செய்ய முடிந்ததில் கவனம் செலுத்துங்கள்.
நீங்கள் நினைக்கலாம் இதெல்லாம் ஒரு பழக்கமா? என்று. ஆனால் இதுவும் ஒரு பழக்கம்தான். நம்முடைய மனது பெரும்பாலும் தேவையில்லாமல் எல்லா விஷயங்களைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கும். நம்மால் மாற்ற முடியாத விஷயங்களை எல்லாம் தன்னுல் சிந்தித்துக் கொண்டு நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு போர், கிளைமேட், டிராபிக் போன்றவற்றை நினைத்து வருந்தி கொண்டிருப்போம். ஆனால் அதுபோன்ற விஷயங்கள் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். நாம் என்னதான் அதை நினைத்து கவலைப்பட்டாலும், நம்மால் ஒருபோதும் அவற்றை மாற்ற முடியாது. எனவே நம்மால் மாற்ற முடியாத விஷயங்களை நினைத்து கவலை கொள்வது முற்றிலும் வீணானது.
நிகழ்காலத்தில் வாழுங்கள்.
இங்கே பலருக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், நிகழ்காலத்தில் வாழாமல், இறந்த காலத்தில் நடந்த விஷயங்களை போட்டு குழப்பிக்கொண்டும், எதிர்காலத்தில் வரப்போகும் விஷயங்களை நினைத்து பயந்துகொண்டும் வாழ்வதுதான். இறந்த காலம் என்பது நமக்கு ஒரு சில பாடங்களை கற்றுத்தந்து நிகழ்காலத்தில் அதை சிறப்பாக மாற்றிக்கொண்டு வாழ்வதற்காகத் தான். அதேபோல நிகழ்காலத்தில் நாம் என்ன செய்கிறோமோ அதுதான் எதிர்காலமாக மாறும், எனவே தேவையில்லாமல் எதிர்காலத்தில் நடக்கப் போகிற விஷயங்களைப் பற்றி கவலை கொள்ளாமல், நிகழ்காலத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலே எதிர்காலம் சிறப்பாக அமையும். எனவே நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள்.
உடலில் கவனம் செலுத்துங்கள்.
உடலின் முக்கியத்துவத்தை பல வழிகளில் நாம் எடுத்துரைத்தாலும், விஞ்ஞான ரீதியாக ஒருவருடைய மனமும், உடலும் நன்றாக இருந்தால் அது அந்த நபரின் மூளையை சிறப்பாக வைத்திருக்கும் என சொல்லப்படுகிறது. நம்முடைய மூளையில் எதுபோன்ற விஷயங்கள் உள்ளதோ அதுதான் நம்மை இயக்குகிறது. எனவே நம்முடைய மூளையை பலம் பொருந்தியதாக வைத்திருந்தாலே நாம் சாதிக்க நினைக்கும் அனைத்தையும் சாதிக்கலாம். அதற்கு முதலில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருந்தாலே நம்முடைய 90% பிரச்சனைகள் நீங்கிவிடும். எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்பாக தன்னம்பிக்கையுடன் செய்ய முடியும். எனவே தினசரி குறைந்தது அரை மணி நேரமாவது தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். இது மிகப்பெரிய மாற்றத்தை உங்கள் வாழ்வில் கொண்டு வரும்.
இந்த மூன்று பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டு, குறைந்தது ஆறு மாதங்கள் பின்பற்றி பாருங்கள். வாழ்க்கையை மிகவும் வித்தியாசமான கோணத்தில் பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள்.